லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால் மாட்டிய விகாஸ் துபே!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டர் செய்ய வந்த 8 போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு மத்திய பிரதேசத்திற்கு தப்பியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    Vikas Dubey சுட்டுக்கொலை...நடந்தது என்ன? | பரபர நிமிடங்கள் | Vikas dubey Last Moment

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் விகாஸ் துபே. இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை, வழக்குகள் உள்ளன. பிக்ருவில் உள்ள கிராமத்தில் இவரை பிடிப்பதற்காக சென்ற போலீஸார் 8 பேரை சுட்டுக் கொன்றார்.

    இவரை உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களின் போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜையினில் காலபைரவர் கோயிலில் அவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விகாஸ் துபே கைதா? சரணா? உபி போலீசுக்கு அடுத்த தலைவலி... கட்டம் கட்டப்பட்ட 200 போலீசார்!!விகாஸ் துபே கைதா? சரணா? உபி போலீசுக்கு அடுத்த தலைவலி... கட்டம் கட்டப்பட்ட 200 போலீசார்!!

    துபே

    துபே

    கடந்த வாரம் முதல் போலீஸார் துபேவை தேடி வரும் நிலையில் அவர் எப்படி உத்தரப்பிரதேசத்திலிருந்து மத்தியபிரதேசத்திற்கு தப்பியிருக்க முடியும் என்பதை பார்ப்போம். விகாஸ் துபே உத்தரப்பிரதேசத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி சென்றது தெரியவந்துள்ளது.

    கண்

    கண்

    அந்த அடையாள அட்டையில் அவரது பெயர் சுபம் என குறிப்பிடப்பட்டிருந்தது. உஜ்ஜைனியில் உள்ள மகா காலபைரவர் கோயிலுக்கு சென்றார் துபே. இதனிடையே அந்த கோயில் வாசலில் பூ விற்கும் நபர், இவர் விகாஸ் துபே என அவர் தனது மாஸ்க்கை சரி செய்த போது பார்த்துவிட்டார். இவரது நடமாட்டங்களில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து கோயிலில் இருந்த பாதுகாப்பு போலீஸாரும் இவர் மீது ஒரு கண் வைத்திருந்தனர்.

    டிக்கெட்

    டிக்கெட்

    அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனது பெயர் சுபம் என கூறிவிட்டு நவீன் பால் என்ற பெயர் கொண்ட அடையாள அட்டையை பார்த்துள்ளார். உடனே போலீஸார் சந்தேகம் அடைவதை அறிந்து சுதாரித்து கொண்ட துபே தப்பியோட முயன்றார். அந்த கோயிலுக்கு செல்ல ரூ 250 கொடுத்து விஐபி டிக்கெட்டையும் வாங்கியிருந்தது தெரியவந்தது.

    டோல்கேட்

    டோல்கேட்

    சிவபுரி டோல்பிளாசாவில் ஜூலை 7-ஆம் தேதி இரவு 11 மணிக்கு துபே காரில் பயணம் செய்தது தெரியவந்தது. இதே காரை தேவாஸ் கேட் அருகே உஜ்ஜயினி போலீஸார் மீட்டனர். விசாரணையில் தன்னை என்கவுன்ட்டர் செய்ய சுற்றி வளைக்க போலீஸார் ஜூலை 2 ஆம் தேதி திட்டமிட்டிருந்ததை தனக்கு சில போலீஸார் தெரிவித்ததாக துபே கூறினார். இதையடுத்து சிவ்லியின் உள்ள உதவியாளரின் வீட்டில் தங்கி பின்னர் ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்திற்கு சென்று அங்கிருந்து ராஜஸ்தானில் உள்ள கோட்டா வழியாக உஜ்ஜயினி சென்றது தெரியவந்தது.

    English summary
    Vikas Dubey arrested at a temple in Madhya Pradesh. How he went from UP to MP?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X