லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீ செய்தது சரி.. உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது பிரியங்கா.. உருகும் கணவர் ராபர்ட் வத்ரா!

தனது மனைவி பிரியங்கா காந்தி மக்களுக்காக களத்தில் இறங்கி கடுமையாக உழைப்பது பெருமையாக இருக்கிறது என்று அவரின் கணவர் ராபர்ட் வத்ரா டிவிட் செய்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

லக்னோ: தனது மனைவி பிரியங்கா காந்தி மக்களுக்காக களத்தில் இறங்கி கடுமையாக உழைப்பது பெருமையாக இருக்கிறது என்று அவரின் கணவர் ராபர்ட் வத்ரா டிவிட் செய்து இருக்கிறார். நேற்று லக்னோவில் பிரியங்காவிடம் உத்தர பிரதேச போலீஸ் அத்துமீறியது தொடர்பாக ராபர்ட் வத்ரா இந்த டிவிட்டை செய்துள்ளார்.

நேற்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ். ஆர் தாராபுரியை சந்திக்க சென்ற போது உ.பி போலீசார் தன்னுடைய கழுத்தை பிடித்து நெரித்ததாகவும், தன்னிடம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் இளம் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் செய்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி கைது செய்யப்பட்டார். இவரின் குடும்பத்தாரை நேற்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் பிரியங்கா காந்தி நேற்று சந்தித்தார். அப்போதுதான் போலீசாரை பிரியங்காவிடம் வாக்குவாதம் செய்தனர்.

சிஏஏ.. என்ஆர்சிக்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் கைது.. ஸ்டாலின், வைகோ, கனிமொழி கண்டனம்சிஏஏ.. என்ஆர்சிக்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் கைது.. ஸ்டாலின், வைகோ, கனிமொழி கண்டனம்

என்ன வாக்குவாதம்

என்ன வாக்குவாதம்

நேற்று பிரியங்கா காந்தி தாராபுரியை சந்திக்க சென்ற போது போலீசார் அவரை தடுத்தி நிறுத்தினார்கள். இதனால் 3 கிமீ கால் நடையாக நடந்து சென்றும், சில கிமீ பைக்கில் சென்றும் பிரியங்கா தாராபுரியை சந்தித்தார். இதில் பிரியங்காவின் கழுத்தை பெண் போலீசார் பிடித்து இழுத்தனர்.

போலீசார்

போலீசார்

முதலில் பிரியாங்காவை அனுமதிக்காத போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அவரின் கழுத்தை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்தனர். பெரும் பிரச்சனைக்கு பின் கடைசியாக பிரியங்கா காந்தி தாராபுரியின் குடும்பத்தாரை சந்தித்தார்.

எப்படி முடிந்தது

இது தொடர்பாக தற்போது பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், பிரியங்காவிடம் அத்துமீறி பெண் போலீசார் நடந்த விதம் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு போலீசார் பிரியங்காவின் கழுத்தை பிடிக்க , இன்னொரு போலீசார் அவரை பிடித்து இழுக்க, கடைசியில் பிரியங்கா கீழே விழுந்துவிட்டார். ஆனால் பிரியங்கா உறுதியாக இருந்தார்.

அதன்பின் அவர் பைக்கில் சென்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரியின் குடும்பத்தாரை சந்தித்தார்.

பெரும் பெருமை

உன்னை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தேவை இருக்கும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று நீ உழைப்பது பெருமை அடைய வைக்கிறது. நீ செய்ததில் எந்த தவறும் இல்லை. நீ மக்களுக்காக அவர்களுடன் உடன் இருப்பது தவறு கிடையாது, என்று மிகவும் பெருமையாக ராபர்ட் வத்ரா டிவிட் செய்துள்ளார்.

English summary
I am proud of you Priyanka Gandhi, What you did was correct says Robert Vadra in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X