லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவங்க பிரதமர்.. நான்தான் உ.பி முதல்வர்.. வெளிப்படையாக அறிவித்த அகிலேஷ்.. இதுதான் திட்டம்!

லோக்சபா தேர்தலுக்கு பின் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நடக்கும், யார் பிரதமராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்பது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha elections 2019 | தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா? உ.பியில் மாயாவதியின் திட்டம்

    லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு பின் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நடக்கும், யார் பிரதமராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்பது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார்.

    நடந்து வரும் லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசம் அதிக முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளது. இதனால் இங்கு அதிக தொகுதிகள் வெல்லும் கட்சி, தேர்தலுக்கு பின் மிக முக்கியமான சக்தியாக உருவெடுக்கும்.

    I will tick the UP CM option and Mayawati will go for PM post says, Akhilesh Yadav

    உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது.

    ஆட்சியை பிடிக்கப்போவது எந்த கட்சி கூட்டணி? நாடு முழுக்க பெட்டிங் தீவிரம்.. செம சர்ப்ரைஸ் கணிப்பு! ஆட்சியை பிடிக்கப்போவது எந்த கட்சி கூட்டணி? நாடு முழுக்க பெட்டிங் தீவிரம்.. செம சர்ப்ரைஸ் கணிப்பு!

    லோக்சபா தேர்தலுக்கு பின் பிரதமராக திட்டமிடுவது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஏற்கனவே இலைமறைக்காயாக பேசி இருந்தார்.

    மாயாவதி தனது பேச்சில், எல்லாம் சரியாக நடந்தால் நான் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு இருக்கிறது. நான் அம்பேத்கார் நகரில் இருந்து தேர்தலில் நிற்க வேண்டி இருக்கும். அம்பேத்கார் நகரில் இருந்து நான் தேர்தலை சந்தித்து எம்பி ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம், என்றார்.

    இந்த நிலையில் தற்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அதை வழி மொழிந்து பேசி உள்ளார். அவர் தனது பேட்டியில், எனக்கு மாயாவதியை பிரதமராக பார்க்க விருப்பம். அது எனக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கும். அதேபோல் அவர் என்னை உத்தர பிரதேச முதல்வராக பார்க்க அதிக சந்தோசம் கொள்வார்.

    எங்கள் கட்சிகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை இருக்கிறது. எங்களின் விருப்பங்கள் வேறு வேறு. அதனால் எங்களுக்கு இடையில் பிரச்சனை வராது. மாயாவதி பிரதமர் ஆக வேண்டும் என்றால் நான் ஆதரவு அளிப்பேன், என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

    இதன் மூலம் மாயாவதி பிரதமர் ஆக ஏற்பாடுகள் நடந்து வருவது தெளிவாக தெரிகிறது. ஆனால் இதற்கு மற்ற மாநில காட்சிகள் ஒப்புக்கொள்ளுமா என்பதே இப்போதைய கேள்வி.

    English summary
    I will tick the UP CM option and Mayawati will go for PM post says, SP chief Akhilesh Yadav.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X