லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் நன்றாக நடந்தால்.. பிரதமர் ஆசையை வெளிப்படுத்தினார் மாயாவதி.. தேசிய அரசியலில் திருப்பம்!

லோக்சபா தேர்தலுக்கு பின் பிரதமராக திட்டமிடுவது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இலைமறைக்காயாக பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் ஆசையை வெளிப்படுத்தினார் மாயாவதி

    லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு பின் பிரதமராக திட்டமிடுவது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இலைமறைக்காயாக பேசி இருக்கிறார். தேசிய அரசியலில் அவரது பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது.

    சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டிற்கு புதிய பிரதமரை அளிக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து தற்போது மாயாவதியும் பேசியுள்ளார்.

    எங்கு நடந்தது

    எங்கு நடந்தது

    இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் அம்பேத்கார் நகர் அருகே மாயாவதி கலந்து கொண்ட அந்த பகுஜன் சமாஜ் கட்சியின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பெரிய பிரம்மாண்ட பாராளுமன்ற படம் போட்ட கட்டிடம் முன் மாயாவதி இருப்பது போல அங்கு கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. இதில் மாயாவதி பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    மாயாவதி தனது பேச்சில், எல்லாம் சரியாக நடந்தால் நான் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு இருக்கிறது. நான் இங்கிருந்து தேர்தலில் நிற்க வேண்டி இருக்கும். அம்பேத்கார் நகரில் இருந்து நான் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஏன் என்றால் அம்பேத்கார் நகரில் இருந்துதான் தேசிய அரசியலுக்கான பாதை தொடங்குகிறது.

    நமோ காலம்

    நமோ காலம்

    இனியும் நமோ நமோ என்று மக்கள் சொல்ல மாட்டார்கள். அதற்கான காலம் எல்லாம் ஓடி விட்டது. மக்கள் அந்த மாயையில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். இது அம்பேத்கார் காலம். இனி நமோ கிடையாது. இனி ஜெய் பீம், ஜெய் பீம் மட்டும்தான், என்று குறிப்பிட்டார்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இதன் மூலம் மாயாவதி பிரதமர் ஆக திட்டமிடுகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அகிலேஷ் யாதவ் மாயாவதியை பிரதமராக்க விருப்பம் என்று தெரிவித்து இருந்தார். மாயாவதி 1989, 1998, 1999 மற்றும் 2004ல் அம்பேத்கார் நகரில் இருந்து எம்.பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    If all goes well, I may have to seek election Hints BSP Mayawati for her PM Ambition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X