லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்கள் பணிக்கு அமர்த்த விரும்பினால் முதலில் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிபந்தனை விதித்துள்ளார்.

Recommended Video

    ‘States will need permission to hire UP workers'- CM Adityanath

    கொரோனா லாக்டவுனில் வட இந்தியாவைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் சிக்கி தவித்து வந்தனர். மத்திய அரசின் சிறப்பு ரயில்கள் மூலம் இந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

    If states want UP migrant workers back, to seek permission: Yogi Adityanath

    மத்திய அரசு இயக்கிய சிறப்பு ரயில்களில் பெரும்பான்மையானவை வட இந்தியாவுக்குதான் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இடம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    இந்த நிலையில் இடம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், பிற மாநிலங்களில் உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் உரிய கவுரவத்துடன் நடத்தப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இனி பிற மாநிலங்கள் தங்களது மாநில தொழிலாளர்களை பணிக்கு எடுக்க வேண்டுமானால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

    போற போக்க பார்த்தா.. இந்த வருஷம் எல்கேஜி யூனிபார்ம் இதுதானா.. வைரல் வீடியோபோற போக்க பார்த்தா.. இந்த வருஷம் எல்கேஜி யூனிபார்ம் இதுதானா.. வைரல் வீடியோ

    தற்போது இடம்பெயர்ந்து ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு லாக்டவுன் கால நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக பரிந்துரைகள் அளிக்க கமிஷன் ஒன்றையும் அமைத்துள்ளோம் என்றார் யோகி ஆதித்யநாத்.

    https://www.oneindia.com/photos/ramazan-celebrations-across-india-during-corona-lockdown-58261.html

    English summary
    UP Chief Minister Yogi Adityanath said that Any state that wants migrant workers from Uttar Pradesh back has to seek permission from the government and need to ensure their socio-legal-monetary rights.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X