லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட விவகாரத்தை இந்து- முஸ்லிம் பிரச்சனையாக மாற்றக் கூடாது என டிவி சேனல் தொகுப்பாளரை கடுமையாக எச்சரித்திருக்கிறார் அவரது தாயார்.

லக்னோவில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி அண்மையில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Kamlesh Tiwari’s mother leaves TV interview

இப்பிரச்சனை குறித்து டிவி சேனல் ஒன்று விவாதம் நடத்தியது. இதில் கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரியும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலேஷ் திவாரி படுகொலை, முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பேச்சு என பல்வேறு கோணங்களில் கொண்டு சென்றார்.

சகாயத்துடன் இணைகிறாரா விஜய் ? தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்!சகாயத்துடன் இணைகிறாரா விஜய் ? தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்!

ஆனால் கமலேஷ் திவாரியின் தாயாரோ, இந்த பிரச்சனையை ஏன் திரும்ப திரும்ப இந்து-முஸ்லிம் விவகாரமாக்க முயற்சிக்கிறீங்க..அது ரொம்ப தப்பு என கூறினார். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்தும் குசும் திவாரி வெளியேறினார்.

உ.பி. முதல்வருடன் சந்திப்பு

இதனிடையே கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் இன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினர். அப்போது கமலேஷ் திவாரி குடும்பத்துக்கு யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறினார்.

English summary
Hindu Samaj Party leader Kamlesh Tiwari's mother slammed out at TV anchor when asked if the murder is related with the Hindu-Muslim issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X