• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அய்யோ".. ஆஸ்பத்திரியில்.. மிருகம் போல சங்கிலியால் கட்டப்பட்ட பத்திரிகையாளர்.. யோகியின் உபியில் ஷாக்

|

லக்னோ: தொற்று பாதித்த பத்திரிகையாளர் ஒருவரை, ஆஸ்பத்திரி கட்டிலில் விலங்கு போல கட்டி வைத்து சித்ரவதை செய்து வருகிறதாம் உபியின் யோகி அரசு..!

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு பீடித்து வருகிறது.. இதில் வடமாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது.. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

நல்லா தின்னுதுங்க.. ஆனா முட்டைய காணோமே.. கோழிகள் பற்றி புகார்.. திணறிப் போன போலீஸ்!நல்லா தின்னுதுங்க.. ஆனா முட்டைய காணோமே.. கோழிகள் பற்றி புகார்.. திணறிப் போன போலீஸ்!

ஆக்ஸிஜன் கிடைக்காமல், ஆஸ்பத்திரி கிடைக்காமல், கடைசியில் சுடுகாடும் கிடைக்காமல் உயிர்கள் அநியாயமாக பறிபோய் கொண்டிருக்கின்றன. இதில் பத்திரிகையாளர்களும் அடக்கம்!.

 6 பத்திரிகையாளர்கள்

6 பத்திரிகையாளர்கள்

தொற்று பாதிப்பு குறித்து கள ரீதியாக இறங்கி வேலை பார்த்தவர்கள்தான் இவர்கள்.. இறுதியில் இவர்களையும் தொற்று பாதித்துவிட்டது.. இதில், வென்டிலேட்டர் கிடைக்காமல் இந்த நாட்களில் மட்டும் 6 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

 ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

இந்த 6 பத்திரிகையாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டவுடன், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது... அதனால், இவர்களில் சிலர் தங்கள் சொந்த முயற்சியிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்துள்ளனர்.. ஆனாலும், அதற்கான வென்டிலேட்டர் கிடைக்காமல் இருந்துள்ளனர். அதன்விளைவுதான் இந்த மரணம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இப்படிப்பட்ட அதிர்ச்சி அடங்கும்முன்பே இன்னொரு சம்பவம் இதே உபியில் தலைதூக்கி உள்ளது.. அவர் பெயர் சித்திக் காப்பன்.. கேரளாவை சேர்ந்தவர்.. ஹத்ராஸில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் அல்லவா? அது சம்பந்தமாக செய்தி சேகரிக்க உபி சென்றுள்ளார் சித்திக்.. இதன் காரணமாக அம்மாநில போலீசார் சித்திக்கை கைது செய்து ஜெயிலிலும் அடைத்தனர்.

சிகிச்சை

சிகிச்சை

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சித்திக், ஜெயிலில் இருக்கும் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்.. இதையடுத்து சிகிச்சை அளித்தபோதுதான், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது... பிறகு, மறுநாளே, மதுராவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. ஆனால், ஆஸ்பத்திரியில் பல இன்னல்களை சித்திக் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.

லெட்டர்

லெட்டர்

இதுகுறித்து சித்திக்கின் மனைவி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணாவுக்கு ஒரு லெட்டர் எழுதியுள்ளார்.. அதில், தனது கணவரை ஆஸ்பத்திரி கட்டிலில் ஒரு விலங்கை போல கட்டி வைத்துள்ளதாகவும், இதனால் சித்திக் கடந்த 4 நாட்களாக சாப்பிடவோ, பாத்ரூமுக்கு செல்லவோ இயலாத நிலையில் இருப்பதாகவும், அங்கிருக்கும் பாட்டிலில்தான் சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் விலாவரியாக எழுதியுள்ளார்.

 சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

உடனடியாக சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் தலையிட்டு சரியான நடவடிக்கையை எடுக்காவிட்டால், சித்திக் உயிரிழந்துவிடுவார் என்று தன் பயத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். கொரோனா தொற்றால் ஏற்கனவே பத்திரிகையாளர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.. உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினர் மூலம் முதல்வர் யோகிக்கு கோரிக்கைகள் பல அனுப்பப்பட்டுள்ளன.

 யோகி அரசு

யோகி அரசு

பத்திரிகையாளர்களை கொரோனா போராளிகளாக அங்கீகரிக்க வேண்டும், பாதிக்கப்படுபவர்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனியாக படுக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரை உபி போலீசார் இவ்வாறு நடத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Kerala Journalist Siddique Kappan gets covid and chained like animal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X