லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அள்ளி அள்ளி கொடுத்த யோகி.. கும்பமேளாவிற்கு உ.பி அரசு எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா?

உத்தர பிரதேச வரலாற்றில் இல்லாத அளவிற்கு யோகி ஆதித்யநாத் அரசு, இந்த வருடம் கும்பமேளாவிற்கு அதிக அளவில் செலவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கும்பமேளாவில் 11 லட்சம் தீபங்களை சேர்ந்து ஏற்றும் அகோரிகள்- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேச வரலாற்றில் இல்லாத அளவிற்கு யோகி ஆதித்யநாத் அரசு, இந்த வருடம் கும்பமேளாவிற்கு அதிக அளவில் செலவு செய்துள்ளது.

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை இந்த விழா தொடங்கியது.

    மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். கடந்த செவ்வாய் கிழமை இந்த விழா தொடங்கியது. மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது.

    பெரிய பிரம்மாண்டம்

    பெரிய பிரம்மாண்டம்

    இந்த விழா கங்கை மட்டுமில்லாமல் யமுனா, சரஸ்வதி நதிக்கரையில் அகோரிகள் வழிபட்டனர். தினமும் பெரிய பெரிய பூஜைகள் இதில் நடக்க உள்ளது. முக்கிய தலைவர்களும் இந்த பூஜையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    எவ்வளவு கொடுக்கிறது

    எவ்வளவு கொடுக்கிறது

    இந்த கும்பமேளாவிற்கு 4200 கோடி ரூபாயை உத்தர பிரதேச அரசு ஒதுக்கி உள்ளது. இந்த கும்பமேளாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உத்தர பிரதேச அரசு இப்படி செய்துள்ளது. யோகி ஆதித்யநாத் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த கும்பமேளா இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்து .

    கும்பமேளா நிதி

    கும்பமேளா நிதி

    இது மட்டுமில்லாமல் மற்ற சில உத்தர பிரதேச அரசு நிறுவனங்கள், தனியார் துறைகளும் இந்த கும்பமேளாவிற்கு பணம் கொடுக்கிறது. கும்பமேளாவிற்கு மத்திய அரசும் நிதி ஒதுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு இதற்கு பணம் அளிக்க வாய்ப்புள்ளது.

    மிக அதிகம்

    மிக அதிகம்

    இதுவரை கும்பமேளாவிற்கு கொடுக்கப்பட்ட நிதிகளில் இதுதான் மிக அதிகம் ஆகும். யோகி ஆதித்யநாத் இதற்காக கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு வந்தார். 2013ல் சமாஜ்வாதி கட்சி இதற்காக 1300 கோடி ரூபாய் செலவு செய்தது. அப்போது 1600 ஏக்கரில் இந்த விழா நடந்தது. இப்போது 3600 ஏக்கரில் இந்த விழா நடக்கிறது.

    English summary
    Kumbh Mela 2019: UP Yogi Aditya Nath's government spends RS. 4500 cr for this grand festival.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X