லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

11 லட்சம் தீபங்களை சேர்ந்து ஏற்றும் அகோரிகள்.. கும்பமேளாவில் பிரம்மாண்ட பூஜை.. ஒரே குறிக்கோள்!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக அகோரிகள் 11 லட்சம் தீபங்களை ஏற்ற இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கும்பமேளாவில் 11 லட்சம் தீபங்களை சேர்ந்து ஏற்றும் அகோரிகள்- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக அகோரிகள் எல்லாம் சேர்ந்து 11 லட்சம் தீபங்களை ஏற்ற இருக்கிறார்கள்.

    உத்தர பிரதேசத்தில் இந்து சாமியார்கள், அகோரிகள் கலந்து கொண்டு வழிபடும் கும்பமேளா தற்போது பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்தியா முழுக்க லட்சக்கணக்கான சாமியார்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த விழாவில் ராமர் கோவிலை மையமாக வைத்து பெரிய பூஜை ஒன்றை அகோரிகள் நடத்த இருக்கிறார்கள்.

    என்ன விழா

    என்ன விழா

    இந்த கும்பமேளாவில் மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் கலந்து கொள்கிறார்கள். கடந்த செவ்வாய் கிழமை இந்த விழா தொடங்கியது. கங்கை மட்டுமில்லாமல் யமுனா, சரஸ்வதி நதிக்கரையில் அகோரிகள் வழிபட்டனர். மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது.

    தீபம் ஏற்றுகிறார்கள்

    தீபம் ஏற்றுகிறார்கள்

    இந்த நிலையில் கும்பமேளாவின் ஒரு பகுதியாக 11 லட்சம் தீபங்களை அகோரிகள் ஏற்ற இருக்கிறார்கள். ஒரே நாளில் 33 ஆயிரம் தீபங்கள் ஏற்றவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். ராமர் கோவில் கட்டுவதற்காக இந்த பூஜையை அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.

    ராமர் கோவில்

    ராமர் கோவில்

    இந்த பூஜை முடிந்தவுடன் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறியுள்ளனர். அதாவது 11 லட்சம் தீபங்களை ஏற்றினால், ராமர் கோவில் கட்டுவதற்கான வழி பிறக்கும். அதன்பின் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என்று அகோரிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கு விசாரணை

    வழக்கு விசாரணை

    ராமர் கோவில் தொடர்பான பாபர் மசூதி சர்ச்சைக்குரிய நில வழக்கு தற்போது விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வரும் 29ம் தேதிதான் இதன் விசாரணை தொடங்க உள்ளது. இந்த வருட இறுதி வரை இந்த வழக்கில் விசாரணை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    English summary
    Kumbh: Over 1 crore Saint will light up 11 lakh lamps this year to construct Ram Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X