லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க!

பெண்களின் பாதுகாப்பிற்காக லிப்ஸ்டிக் துப்பாக்கி ஒன்றை வடிவமைத்துள்ளார் உத்திரப்பிரதேச இளைஞர் ஒருவர்.

Google Oneindia Tamil News

லக்னோ: ஆபத்து நேரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு உதவிடும் வகையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளார் உத்திரப்பிரதேச இளைஞர் ஒருவர்.

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை காமக்கொடூரன்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

lipstick-gun-for-women-safety

அது போன்ற சமயங்களில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், மற்றவர்களின் உதவியைப் பெறும் வகையிலும் பல்வேறு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பெண்களின் பாதுகாப்புக்காக மலிவான விலையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷ்யாம் சௌரசியா என்ற இளைஞர். வாரணாசியைச் சேர்ந்தவர் ஷ்யாமின் இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கி ரூ. 600 மதிப்பிலானது ஆகும்.

அறிவியல் விஞ்ஞானி ஆக விரும்பும் ஷ்யாம், மொபைல் போன் மூலம் ப்ளூடூத் இணைப்பையும் கொண்டதாக அந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

lipstick-gun-for-women-safety

ஆபத்தில் சிக்கும் பெண் இந்த லிப்ஸ்டிக்கில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்.உடனே துப்பாக்கி குண்டு வெடிப்பது போன்ற ஒரு சத்தம் எழுமாம். அதனுடன் உடனடியாக அவசர உதவி எண் 112-க்கு உதவி கோரி குறுந்தகவல் சென்று விடும்.

பெப்பர் ஸ்பிரே, செல்போன் செயலி போன்றவைகளை தாக்குதல் நடத்துபவர்கள் எளிதாக அடையாளம் கண்டு, பாதிக்கப்படும் பெண்ணிடம் இருந்து பிடுங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், சாதாரண ஒரு லிப்ஸ்டிக் போன்றே இருப்பதால், இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராது என்கிறார் ஷ்யாம்.

தற்போது இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஷ்யாம் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக குறைந்த விலையில் வித்தியாசமாக லிப்ஸ்டிக் துப்பாக்கியைத் தயாரித்த ஷ்யாமிற்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

English summary
Shyam Chaurasia, a local inventor from the northern Indian city of Varanasi, has developed accessories that can fire a blank round to protect women from sexual harassment. His lipstick gun can trigger a loud, explosion-like sound and call India’s emergency services when the user needs help. Chaurasia hopes the gadgets can help women threatened with a sexual crime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X