லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்.. ரோடு போடுவதில் தகராறு.. டக்குன்னு துப்பாக்கியை எடுத்து அப்பா, மகனை சுட்டு தள்ளிய.. உ.பி. தாதா

சமாஜ்வாதி கட்சி தலைவர், அவரது மகன் சுட்டு கொலை செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

லக்னோ: பேசிக் கொண்டே இருந்த "உள்ளூர் தாதா", திடீரென துப்பாக்கியை எடுத்து அரசியல் கட்சி பிரமுகரையும், அவரது மகனையும் சுட்டு பொசுக்கிவிட்டார்.. இந்த சம்பவம் உபியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாம்சோய் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் லால் திவாகர்.. இவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.. திவாகர் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகரும்கூட!!

lockdown crime: samajwadi party leader and his son shot dead in uttar pradesh

இந்நிலையில், இவர்கள் கிராமத்தில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.. .. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்த சாலை போடப்பட்டு வருகிறது. அதனால் திவாகரும், அவரது மகனும் அந்த சாலையை பார்வையிட சென்றனர்.

சாலை அமைப்பது தொடர்பாக உள்ளூர் பிரமுகர்களிடம் திவாகரும், மகனும் வாக்குவாதம் செய்துள்ளனர்.. இது தகராறாக உருவெடுத்தது.. இப்படி தகராறு செய்தவர்களில் ஒருவர்தான் சவிந்தர் என்பவர்..இவர் அந்த ஊர் தாதா என்கிறார்கள்.. சவிந்தரும், உடனிருந்தவர்களும் கையில் துப்பாக்கியுடன்தான் தகராறு செய்தனர்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் அப்பாவையும், மகனையும் சுட்டு விட்டனர்.. அடுத்த செகண்டே திவாகரும், சுனிலும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்கள். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சவீந்தரும், உடனிருந்தவர்களும் துப்பாக்கியால் சுட்டது பதிவாகியிருந்தது.. இது சம்பந்தமாக விசாரணையும் ஆரம்பமானது.

போதுமான அளவு கொரோனா டெஸ்டிங் ஏற்கனவே நடக்கிறது.. பொதுநல வழக்கை முடித்து வைத்த சென்னை ஹைகோர்ட்!போதுமான அளவு கொரோனா டெஸ்டிங் ஏற்கனவே நடக்கிறது.. பொதுநல வழக்கை முடித்து வைத்த சென்னை ஹைகோர்ட்!

பஞ்சாயத்து நிர்வாகம் அமைத்த சாலை, தங்களது வயலையும் சேர்த்து ஆக்கிரமிப்பதாக சொல்லி சவிந்தர் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட 2 குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
lockdown crime: samajwadi party leader and his son shot dead in uttar pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X