• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்ன ஒரு முட்டாள்தனம் பாருங்க.. மக்கள் மீது நேரடியாகவே நடத்தப்பட்ட "கெமிக்கல் குளியல்".. உபி ஷாக்!

|

லக்னோ: "கண்ணை மூடு, கண்ணை மூடு.. குழந்தை கண்ணையும் மூடு" என்று பதறுகிறது ஒரு குரல்... பெண்களும் குழந்தைகளும் என்ன செய்வது என்று திகைத்து, விழிக்க.. அவர்கள் மீது நேரடியாகவே கிருமிநாசினியை தெளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

  திரும்பி வந்த புலம்பெயர்ந்த மக்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமி நாசினி

  கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.. இப்படி திடுதிப்பென்று ஊரடங்கு என்று சொல்லிவிடவும் சொந்த ஊருக்கு கிளம்பி செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் தவித்தனர்.

  பிழைப்பு தேடி வந்த இடத்தில் வேலையும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் கஷ்டப்படுவதைவிட, நடந்தாவது ஊர் போய் சேரலாம் என குடும்பம் குடும்பமாக கிளம்பி உள்ளனர்.. குழந்தைகளை கையிலும், இடுப்பிலும், தோளிலும் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.

  இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்

  பயணம்

  பயணம்

  வரும் வழியில் எங்குமே கடைகள் இல்லை.. வயிற்றுக்கு சாப்பாடும் இல்லை.. கையில் பணமும் இல்லை.. மனசெல்லாம் வலி, வேதனை, விரக்தி, குழப்பத்துடன் கூட்டம் கூட்டமாக வடமாநில மக்கள் நடந்தே பயணத்தை தொடர்ந்துள்ளனர்.. இதில் அதிகமானோர் உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான்.. லட்சக்கணக்கில் திரண்டு கிளம்பி ஊர் திரும்பி வருகின்றனர்... ஒருவகையில் இப்படி கிளம்பி வருவதாலும் சமூக தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

  லக்னோ

  லக்னோ

  அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பி வந்துள்ளனர்.. லக்னோவிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் உள்ள ஊரில் வெளிமாநிலத்திற்கு சென்று திரும்பியவர்கள். ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே அவர்களை அதிகாரிகள் உட்கார வைத்துள்ளனர்.

  கவச உடை

  கவச உடை

  அழைத்துச் செல்ல பஸ்கள் வரும், சாப்பாடும் வரும் என்றும் அங்கேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனால் எல்லாருமே சாலையிலேயே உட்கார்ந்துவிட்டனர். அந்த சமயத்தில் 2 பேர் அங்கு வந்து, உட்கார்ந்திருந்த மக்கள் மீது கிருமிநாசினியை தெளித்துள்ளனர். அவர்கள் 2 பேருமே பாதுகாப்பு கவச உடை அணிந்த ஊழியர்கள்.. திடீரென தங்கள் மீது நேரடியாகவே ஸ்பிரே அடிக்கவும் அதிர்ச்சியடைந்தனர் ஊழியர்கள். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோதான் தற்போது வெளியாகி உள்ளது.

  வீடியோ

  அந்த கிருமிநாசினியை தெளிக்கும்போது குழந்தைகளின் கண்களில் பட்டு எரிச்சலை உண்டாக்கிவிட்டது.. கொஞ்ச நேரத்தில் சிலருக்கு தோலில் தடிப்பும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீது நேரடியாகவே அந்த கிருமிநாசினியை தெளித்துள்ளனர்.. அந்த வீடியோவில் கண்ணை மூடு.. கண்ணை மூடு.. தயவுசெய்து குழந்தைங்க கண்ணையும் என்று ஒருவரது குரலை கேட்க முடிகிறது. பாதுகாப்புக்காகத்தான் கிருமிநாசினியை தெளித்திருந்தாலும், அதனை மக்கள் மீது நேரடியாக தெளித்திருப்பதுதான் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.

  கிருமிநாசினி

  கிருமிநாசினி

  ஆனால் இதற்கு மாவட்ட அதிகாரி ஒருவர் விளக்கம் தந்துள்ளார். "புலம்பெயர்ந்தோர் குளோரின், தண்ணீரின் கலவையுடன் தெளிக்கப்பட்டனர்.. இந்த கிருமிநாசினியில் எந்த ரசாயன கரைசலும் பயன்படுத்தப்படவில்லை. கண்களை மூடிக்கொண்டிருக்குமாறு நாங்கள் மக்களை கேட்டு கொண்டோம்.. நாங்கள் ஒன்றும் மனிதாபிமானமற்றவர்கள் என்று அர்த்தமல்ல.. எல்லாரையும் சுத்தப்படுத்துவது முக்கியம்.. நிறைய பேர் திரும்பி வந்துட்டதால அவசரமாக அப்படி செய்ய நேர்ந்தது" என்று தெரிவித்துள்ளார்.

  கண்டனங்கள்

  கண்டனங்கள்

  இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் கடுமையாக கண்டித்துள்ளார்.. "நான் உபி அரசாங்கத்திடம் முறையிடுகிறேன்... நெருக்கடியான இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுகிறோம்... தயவுசெய்து இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.. தொழிலாளர்கள் ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார்கள்.. அவங்க மீது ரசாயனங்கள் தெளிக்க வேண்டாம்... இது அவர்களைப் பாதுகாக்காது... மாறாக அது அவர்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

  அதிர்ச்சி

  அதிர்ச்சி

  தெளிக்கப்பட்ட அந்த கிருமிநாசினியில் கெமிக்கல் கலந்திருந்ததா, அதன் அளவு என்ன என்பதை பற்றி உறுதியாக தெரியவில்லை.. ஆனால் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது தெளிக்கப்பட்டது சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் என்பதும், அது துணிகளை வெளுக்க பயன்படுத்தப்படும் கிருமிநாசினி என்பதும் தெரிய வந்தது. இப்படி ஒரு தகவல் வெளிவந்ததும் பொதுமக்கள் கொதித்து போய் உள்ளனர்! சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கும் மக்கள் மீது நேரடியாகவே இப்படி கிருமிநாசினியை தெளிக்கும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.

  விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
  இன்றே பதிவு செய்யுங்கள்
  - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  lockdown: disinfectant sprayed on migrants on return to up, shocking video
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more