லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்மா வீட்டுக்கு போன மனைவி.. குறுக்கே வந்த லாக்டவுன்.. சோகமான கணவர்.. தூக்கில் தொங்கினார்!

மனைவியை பிரிந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

லக்னோ: எத்தனை நாள்தான் மனைவியை பார்க்காமல் இருப்பது? ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியாமல் தவித்து, மனம் உடைந்த கணவர் வீட்டில் தற்கொலையே செய்து கொண்டார்.

இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள கொரோனா வைரஸ் பரவலால் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே நாடு முழுவதும் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தவாறே உள்ளது.

lockdown: man committed suicide in uttar pradesh

அதனால் சில மாநிலங்களில் 144 உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகின்றன.. தற்போது நாடு முழுவதும் உள்ள லாக்டவுன் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.. தற்போது தொற்று பரவல் அதிகமாகி வருவதால், இந்த லாக்டவுனையும் நீடிக்கலாமா என்றும் மத்திய அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. சில மாநிலங்கள் லாக்டவுன் வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கையே வைத்து வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கால் தன் மனைவியை பார்க்க முடியாமல் கணவர் மனம் உடைந்துவிட்டார்.. உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ராகேஷ் சோனி.. 32 வயதாகிறது.. இவரது மனைவி ஊரடங்கிற்கு முன்பு அவரது அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் திடுதிப்பென்று ஊரடங்கு உத்தரவு போடவும் அவரால் அங்கிருந்து கணவன் வீட்டிற்கு திரும்பி வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 நிறைமாத கர்ப்பிணி.. வயிற்றில் தீவைத்து எரித்த கொடூர புஷ்பவல்லி.. தஞ்சையில் ஷாக்! நிறைமாத கர்ப்பிணி.. வயிற்றில் தீவைத்து எரித்த கொடூர புஷ்பவல்லி.. தஞ்சையில் ஷாக்!

போக்குவரத்து எதுவும் இல்லை.. அதேசமயம் மனைவியை பிரிந்து பல நாள் சோனியால் இருக்கவும் முடியவில்லை.. ஒரு கட்டத்தில் வெறுத்துபோன அவர் இன்று அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
32 year old lucknow man commits suicide because he missed wife in lockdown
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X