லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

காய்கறி வாங்க கடைக்கு சென்ற மகன் மணமகளுடன் வீடு திரும்பியுள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: லாக்டவுனில் மளிகை சாமான் வாங்க போன இளைஞர், பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

    Mother sends son to buy groceries, he returns with wife

    நாடு முழுவதும் 2-ம் கட்டத்தில் லாக்டவுன் உள்ளது... அதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படியே மக்களும் தேவையின்றி வெளியே வருவதில்லை.

    அப்படியே வெளியே வந்தாலும் போலீஸ் அவர்களை விடுவதில்லை.. அறிவுறுத்தி வீட்டுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம், காசியாபாத்தில் ஹூடு என்ற 26 வயது இளைஞர் தன்னுடைய அம்மாவிடம், கடைக்கு போய் காய்கறிகள் வாங்கி வரட்டுமா? என கேட்டார்.. அப்படியே கொஞ்சம் மளிகை பொருட்களையும் வாங்கி வருவதாக சொன்னார்..

    பதறினார்

    பதறினார்

    அதற்கு அவரது அம்மாவும் சரியென்று சொல்லவும் இளைஞரும் கடைக்கு போனார். ஆனால் திரும்பி வந்தவர் காய்கறி, மளிகையுடன் ஒரு பெண்ணையும் உடன் அழைத்து வந்தார்.. இதை பார்த்ததும் அவரது அம்மா பதறிவிட்டார்.. அந்த பெண் யார் என்று கேட்கவும், அவள்தான் என் பொண்டாட்டி, கல்யாணம் செய்து கொண்டு கூட்டிட்டு வந்தேன், நாங்க இப்போ புதுமண தம்பதி என்றார்.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    இதை கேட்டு அம்மா மேலும் அதிர்ச்சி அடைந்தார்.. அவரால் இதை நம்பவே முடியவில்லை.. ஆத்திரமும் தாங்கவில்லை.. அதனால் நேரடியாக போலீசுக்கு போய் விட்டார்.. கடைக்கு போறேன்னு சொல்லிட்டு, இப்போ ஒரு பெண்ணோட வந்திருப்பதாகவும், ஊரடங்கு நேரத்தில் தன்னை ஸ்டேஷன் வரை வரவழைத்து விட்டதாகவும் மகன் மீது புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மணமக்களிடம் கல்யாணம் எங்கே செய்தீங்க? ஆதாரம் எங்கே? என்று கேட்டனர்.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    அதற்கு மணமக்களோ, "எங்களுக்கு ஒரு புரோகிதர்தான் கல்யாணம் செய்து வைத்தார்.. நாங்க சர்டிபிகேட் கேட்டோம், ஆனால், லாக்டவுன் முடிந்தபிறகுதான் அதை தர முடியும் என்று சொல்லி விட்டார்" என்றார்கள். 2 மாதங்களுக்கு முன்பே யாருக்கும் தெரியாமல் கோயிலில் வைத்து ஸ்வேதாவுக்கு தாலி கட்டியுள்ளார்... ஊரடங்கு என்பதால் சர்ட்டிபிகேட்டும் பெற முடியாமல், இந்த விஷயத்தை வெளியேவும் சொல்லாமல், ஸ்வேதாவை டெல்லியில் ஒரு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.

    ஸ்வேதா

    ஸ்வேதா

    எப்படியும் லாக்டவுன் முடிந்ததும் சர்டிபிகேட் வாங்கி ஊரறிய இந்த விஷயத்தை சொல்லலாம் என்றுதான் ஹூடு நினைத்திருந்தார். ஆனால் ஸ்வேதாவை டெல்லி வீட்டை அந்த ஹவுஸ் ஓனர் காலி செய்ய சொல்லிவிட்டாராம்... எங்கே போவது என்றே தெரியாமல் ஸ்வேதா ஹூடுவுக்கு போன் செய்து அழுதுள்ளார். இந்த சமயத்தில்தான் மளிகை சாமான் வாங்கி வர கடைக்கு போய், வரும்போது சுவேதாவை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.. கடைசிவரை ஹூடுவின் அம்மா இந்த கல்யாணத்தை ஏற்கவே இல்லை.

    தம்பதி

    தம்பதி

    2 பேரையுமே வீட்டிற்குள் விட மாட்டேன் என்று தகராறு செய்யவும்தான், ஹூடு போலீஸ் ஸ்டேஷன் சென்றார். போலீசார் எவ்வளவோ சொல்லியும் ஹூடுவின் அம்மா அவர்களை உள்ளே விடவே இல்லை.. இதையடுத்து போலீசார் டெல்லியில் ஸ்வேதா தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம் பேசி தற்காலிகமாக தம்பதியை தற்க வைத்துள்ளனர்.. காய்கறி வாங்கி வருவதாக சொல்லவிட்டு, கடைக்கு போனவர் பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    lockdown: mother sends son to buy vegetables he returns with wife near up
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X