லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்... "என்னால் கணிக்க முடியாது".. ராஜ்நாத் சிங் பேட்டி

Google Oneindia Tamil News

லக்னோ: லக்னோ மக்களவை தொகுதியில் வாக்களித்துவிட்டு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னால் எதையும் கணிக்க முடியாது, மக்கள் யார் வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லக்னோ தொகுதியில் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூணம் சின்ஹா சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

Lok Sabha elections 2019: I Cant Predict Anything: Rajnath Singh After Voting In Lucknow

இன்று லக்னோ மக்களவை தொகுதிக்கும் ,இன்று தேர்தல் நடந்து வரும் நிலையில் காலை 7.30 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து ராஜ்நாத் தனது வாக்கினை அளித்தார்.

பின்னர் வாக்களித்த கையை செய்தியாளர்களுக்கு கேமராவில் படுமாறு புன்னகைத்தபடி தூக்கி காண்பித்தார். அப்போது தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

மாணவிகளிடம் தீவிரவாதிகள் போல சோதனை நடத்துவதா.. முத்தரசன் கண்டனம் மாணவிகளிடம் தீவிரவாதிகள் போல சோதனை நடத்துவதா.. முத்தரசன் கண்டனம்

அதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், "என்னால் எதையும் கணிக்க முடியாது. லக்னோ வாக்காளர்களிடமே இதற்கான முடிவினை விட்டுவிடுகிறேன். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது. மக்கள் யாரை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அவர்களே நாட்டை ஆள்வார்கள். ஒருவேளை மக்கள் பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் அவர் மீண்டும் பிரதமராக வருவார்" இவ்வாறு கூறினார்.

English summary
Home Minister Rajnath Singh After Voting In Lucknow said. "I Can't Predict Anything, The people have the full right to choose who they want"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X