லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Google Oneindia Tamil News

லக்னோ: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

1992 டிசம்பர் 6-ந் தேதி இந்தியாவின் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை வேட்டு வைத்து தகர்க்கப்பட்ட- 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்புதான் இந்தியாவில் இன்று பாஜக அரியாசனத்தில் அமரவும் அடிப்படை காரணி.

எல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா எல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா

அத்வானி உட்பட 32 பேர்

அத்வானி உட்பட 32 பேர்

இன்னொரு பக்கம் இந்த தேசம் வரலாறு காணாத மதமோதல்களை எதிர்கொள்ளவும் உலகையே உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு, குஜராத் இனப்படுகொலை ஆகியவற்றுக்கும் காரணமாக இருந்தது. இந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லக்னோ கோர்ட்டில் தீர்ப்பு

லக்னோ கோர்ட்டில் தீர்ப்பு

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் நாளை நீதிபதி சுரேந்திரகுமார் தீர்ப்பு வழங்க இருக்கிறார். 28 ஆண்டுகள் நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

17 பேர் மரணம்

17 பேர் மரணம்

இந்த வழக்கில் குற்றம்சட்டப்பட்டுள்ள பாஜக தலைவர்கள் அத்தனைபேரும் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஓரம்கட்டப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 49 பேர் மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் 17 பேர் விசாரணை காலத்திலேயே காலமாகிவிட்டனர்.

351 பேர் சாட்சிகள்

351 பேர் சாட்சிகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் மரணம் அடைந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் பால்தாக்கரே, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், டால்மியா உள்ளிட்டோர். இவ்வழக்கில் மொத்தம் 351 சாட்சிகள், 600 ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது.

English summary
Lucknow Special CBI court will pronounce its verdict in Babri Masjid demolition case on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X