லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரியங்கா காந்தியை டூ வீலரில் அழைத்து சென்ற காங். தொண்டருக்கு ரூ6,100 அபராதம் விதித்த லக்னோ போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை டூ வீலரில் அழைத்து சென்ற போது ஹெல்மெட் அணியாததால் காங்கிரஸ் தொண்டருக்கு லக்னோ போலீசார் ரூ6,100 அபராதம் விதித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரியை சந்திக்க பிரியங்கா காந்தி நேற்று சென்றிருந்தார். ஆனால் பிரியங்கா காந்தியின் காரை லக்னோ போலீசார் முன்னேற விடாமல் தடுத்தனர்.

Lucknow Congress party worker challaned with a penalty

இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் டூ வீலரில் ஏறி தாராபுரி வீட்டுக்கு சென்றார் பிரியங்கா காந்தி. தாராபுரியை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு திரும்பிய பிரியங்கா காந்தி, தம்மை போலீசார் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர் காங்கிரஸார் பிரியங்கா மீதான தாக்குதலைக் கண்டித்து டெல்லி உ.பி.பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

3 3 "C"க்களை கண்டு அஞ்சாதீர்.. வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்!

இந்நிலையில் பிரியங்கா காந்தியை டூ வீலரில் அழைத்துச் சென்றபோது காங்கிரஸ் தொண்டர் ஹெல்மெட் அணியாமல் சென்றார். இதனால் அவர் சாலை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த காங்கிரஸ் தொண்டருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ரூ6,100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

English summary
The Congress party worker on whose two wheeler Priyanka Gandhi Vadra travelled while going to meet family members of Former IPS officer SR Darapuri yesterday, has been challaned with a penalty of Rs 6100 for not wearing helmets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X