லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட ஒரு மார்க்குகூட விடலை...பூரா மார்க்கையும் அள்ளிய உபி மாணவி!!

Google Oneindia Tamil News

லக்னோ: இன்று வெளியாகி இருக்கும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவைச் சேர்ந்த மாணவி திவ்யான்ஷி ஜெயின் 600க்கு 600 மார்க் எடுத்துள்ளார். இவர் ஒரு பாடத்தில் கூட ஒரு மார்க் கூட இழக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து இருக்கும் திவ்யான்ஷி ஜெயின் கூறுகையில், ''இது நம்ப முடியாமல் இருக்கிறது. நான் சந்தோஷமாக, ஆச்சரியத்துடன் இருக்கிறேன். என்னை ஆசிரியர்கள் சரியான பாதையில் அழைத்து சென்றனர்'' என்று தெரிவித்துள்ளார். நவ்யூக் ராடியன்ஸ் சீனியர் பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவி, ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், இன்சூரன்ஸ் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதி இருந்தார். புவியியல் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுதி இருந்தார். கொரோனா காரணமாக புவியியல் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தது.

Lucknow girl Divyanshi Jain scored 600 out of 600 in plus 2 marks

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் இந்த வருடம் பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெற்றன. 13,109 பள்ளிகளைச் சேர்ந்த 11 லட்சத்து 92 ஆயிரத்து 961 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்வின் போது 83.40 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். எனவே அதைவிட ஒப்பிடும்போது இந்த வருடம் 5.3 8% மாணவர்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவனந்தபுரம் மண்டலம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. 97.67 சதவீத மாணவர்கள் திருவனந்தபுரம் மண்டலத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுரையில் இதுவரை இல்லாத உச்சமாக.... இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா.. மக்களே கவனம்!மதுரையில் இதுவரை இல்லாத உச்சமாக.... இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா.. மக்களே கவனம்!

இரண்டாவது இடம் பிடித்துள்ள பெங்களூர் மண்டலத்தில் 97.05 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 96.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பதிலேயே குறைவான தேர்ச்சி பெற்ற மண்டலம் பீகார் மாநிலத்தின் பாட்னா மண்டலம். அங்கு 74.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

English summary
Lucknow girl Divyanshi Jain scored 600 out of 600 in plus 2 marks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X