லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்லீரல் பாதிப்பு.. 3 மாத குழந்தையை சாக்கடையில் வீசிய கல் நெஞ்சம் கொண்ட தாய் கைது

Google Oneindia Tamil News

லக்னோ: கல்லீரல் பாதிக்கப்பட்ட 3 மாத கைக் குழந்தையை சாக்கடையில் வீசி கொன்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீஸார் கைது செய்தனர்.

லக்னோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று 3 மாதங்களுக்கு முன்னர் பிறந்தது. இந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

Lucknow woman who throws 3 month old sick baby from 4th floor, arrested

இதனால் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து கல்லீரல் பாதிக்கப்பட்டதாகவும் தொடர் சிகிச்சை அளித்தாலும் பலனில்லை என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். எனினும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குழந்தையை காணவில்லை என தாய் புகார் கொடுத்தார். அந்த புகாரை விசாரிக்க சென்ற போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த வீடியோவில் திடுக் காட்சிகள் வெளியானது. புகார் கொடுத்த தாயே அந்த குழந்தையை மருத்துவமனையின் 4ஆவது மாடியிலிருந்து வீசியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தாயை போலீஸார் கைது செய்தனர்.

English summary
Lucknow woman who throws 3 month old sick baby from 4th floor, arrested as the boy had liver disorder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X