லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பியில் அவமதிப்பு.. தூய்மை இந்தியா திட்ட கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுப்பட்ட கழிவறைகளில் தேச தந்தை மகாத்மா காந்தி, அசோக சக்கரம் மற்றும் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேச தந்தையான மகாத்மா காந்தி கடந்த சில நாட்களாக பாஜகவினரின் வாயில் சிக்கி பேசு பொருளாகியுள்ளார். கமலின் இந்து தீவிரவாதி என்ற பிரச்சாரத்தின் போது தொடங்கிய சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.

பாஜக எம்பியும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர் என்றார். இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். பிரக்யாசிங்கை மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காந்தியை கொன்றது சரிதான் என்றார். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றியும் கூறினார். இதனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழகத்திற்கு அவமதிப்பு

இந்நிலையில் மகாத்மா காந்தியை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளனர். மகாத்மா காந்தியை மட்டுமின்றி தமிழகத்தையும் பெரிதும் அவமதித்துள்ளனர். கழிவறையில் தமிழக அரசின் சின்னம் பதியப்பட்ட டைல்ஸ் கற்களை ஒட்டி தமிழர்களையும் சீண்டி வம்புக்கிழுத்துள்ளனர்.

 உபியில் இலவச கழிவறை

உபியில் இலவச கழிவறை

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான இலவச கழிவறைகள் கட்டிகொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர்ஷா பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் 508 கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

 கழிவறையில் காந்தி, அசோக சக்கரம்

கழிவறையில் காந்தி, அசோக சக்கரம்

இதில் இச்சாவளி என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 13 கழிவறைகளில் மகாத்மா காந்தி, தேசியக்கொடியில் உள்ள தேசிய சின்னமான அசோக சக்கரம் மற்றும் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

 வளர்ச்சித்துறை அதிகாரி கைது

வளர்ச்சித்துறை அதிகாரி கைது

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கிராம வளர்ச்சித்துறை அதிகாரி சந்தோஷ்குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

 கிரிமினல் நடவடிக்கை

கிரிமினல் நடவடிக்கை

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிவறைகளில் தேச தந்தை மகாத்மா காந்தியின் படம் பொறிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காந்தியின் படம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்களை கழிவறையில் ஒட்டிய அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரதமர் முதல்வர் படம்

பிரதமர் முதல்வர் படம்

மத்திய பிரதேசத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் படம் பொறிக்கப்பட்ட டைஸ்ஸ் கற்கள் ஒட்டப்பட்டன. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த அம்மாநில உயர்நீதிமன்றம் படம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்களை அகற்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
In UP Mahatma gandhi and national symbol plastered in Toilet tiles. This became controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X