லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பகவான் கிருஷ்ணர் பிறப்பிட சர்ச்சை.. கோயிலில் உள்ள மசூதியை அகற்ற கோரி வழக்கு.. விசாரிக்க ஒப்புதல்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் விவகாரத்தை தொடர்ந்து தற்போது பகவான் கிருஷ்ணரின் பிறப்பிடத்தை கேட்டு சர்ச்சை எழுந்துள்ளது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் உள்ள மசூதியை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லக்னோவில் உள்ள நீதிமன்றம் 28 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட பாபர் கோவில் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வருகீறது. இதற்கிடையில், கிருஷ்ணரின் பிறந்த இடத்தை கேட்டு ஒரு வழக்கை மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புனித நகரமான மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணரின் கோயில் வளாகத்தில் முகலாய பேரசர் அவுரங்க சிப்பின் உததரவுப்படி மசூதி கட்டப்பட்டதாகவும், அந்த இடம் கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும் அங்குள்ள மசூதியை அகற்ற வேண்டும் என்று கோரி இந்துக்கள் குழுவினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் .

லக்னோவில் வசிக்கும் ரஞ்சனா அக்னிஹோத்ரி மற்றும் டெல்லியில் வசிக்கும் பர்வேஷ்குமார், உத்தரபிரதேசத்தின் சித்தார்த் நகரைச் சேர்ந்த ராஜேஷ் மணி திரிபாதி, பஸ்தியைச் சேர்ந்த கருனேஷ் குமார் சுக்லா, மற்றும் லக்னோவைச் சேர்ந்த சிவாஜி சிங் மற்றும் திரிபுராரி திவாரி உள்ளிட்ட 5 பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு நாட்டையே​ நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடிஒரு நாட்டையே​ நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடி

மசூதி கட்டப்பட்டுள்ளது

மசூதி கட்டப்பட்டுள்ளது

அவர்கள் தங்கள் மனுவில் புனித நகரமான மதுராவில் கிருஷ்ணர் கோயில் ( கத்ரா கேசவ் தேவ் கோயில்) 13.37 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ளது. ஆனால் அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தில் 1669-1670ல் முகலாய பேரரசர் ஔரங்கசிப்பின் உத்தரவின் பேரில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு

நீதிமன்ற தீர்ப்பு

இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி இட்கா மேலாண்மைக் குழு இடையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி கோயில் வளாகத்திற்குள் மசூதி இருக்கிறது. இந்த ஒப்பந்ததைத்தை உறுதி செய்து 1968ம் ஆண்டு மதுரா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இந்த வழக்கு சிவில் நீதிபதி சாயா சர்மா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணை வரும் செப்டம்பர் 30 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். ராமர் பிறப்பிடத்தை தொடர்ந்து கிருஷ்ணர் பிறப்பிடம் குறித்தும் வழக்குக்ள் தொடரப்பட்டிருப்பது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அற்பமான செயல்

அற்பமான செயல்

இதனிடையே பகவான் கிருஷ்ணரின் பிறப்பிடத்திற்கு அருகிலுள்ள ஷாஹி இட்கா மசூதியை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்திருப்பதற்க கில் பாரதிய தீர்த்த புரோஹித் மகாசபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில் பாரதிய தீர்த்த புரோஹித் மகாசபாவின் தேசியத் தலைவர் மகேஷ் பதக் இந்த வழக்கு பற்றி கூறும் போது, "சில அந்நியர்கள் கோயில்-மசூதி பிரச்சினையை மிக அற்பமாக எழுப்புவதன் மூலம் மதுராவின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

தகராறுகள் இல்லை

தகராறுகள் இல்லை

கடந்த 1968களில் இரு மதத்தினருக்கும் இடையிலான சமரசத்திற்குப் பிறகு ஸ்ரீகிருஷ்ணா ஜன்மாஸ்தானில் மதுராவில் கோயில்-மசூதி மோதல்கள் இல்லை. இரு சமூகங்களுக்கிடையில் முழுமையான நல்லிணக்கம் இருக்கிறது., இரு ஆலயங்களும் ஒரே இடத்தில் இருப்பது ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு": என்று அவர் கூறினார்.

அந்நிய படையெடுப்பு உண்மை

அந்நிய படையெடுப்பு உண்மை

இதற்கிடையில், மதுரா மாவட்டத்தில் மின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிட மதுராவுக்கு வருகை தந்த உத்தரபிரதேச மின் அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, ஒரு ஜனநாயக நாட்டில், தனது நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கவும், வெளிப்படுத்தவும் அனைவருக்கும் உரிமை உண்டு, அனைவருக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரமும் உண்டு என்றார். பகவான் கிருஷ்ணர் பிறப்பிட தகராறு தொடர்பான வழக்கு பற்றி கேட்டதற்கு, அந்நிய படையெடுப்பார்கள் நாட்டில் உள்ள மத இடங்களை இடிக்க முயன்றது உண்மைதான் என்றார். எனினும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஜனநாயகத்தில் நீதித்துறை மிக உயர்ந்தது சட்டத்தின் படியே அரசு செயல்படும் என்றார்.

English summary
a Mathura civil court will be hearing the case of getting back the land of Lord Krishna's birthplace. In a brief hearing held on September 28, ADJ Chhaya Sharma approved the case for hearing. The hearing process and debate will now start from September 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X