லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித்ஷா சொல்றாரே.. மோடி ஏன் கப்சிப்னு இருக்கார்.. மாயாவதி கேள்வி

Google Oneindia Tamil News

லக்னோ: "பாஜக தலைவர் அமித்ஷா, 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்கிறார். ஆனால் எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என புகழ்பாடும் அவரது குருவான பிரதமர் மோடியோ அமித்ஷாவின் கருத்துக்கு ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்?" என்று மாயாவதி நறுக்கென கேள்வி கேட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதுடன் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை இது உறுதிப்படுத்தப்படவில்லை.

 மசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே! மசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே!

கணக்கிடவில்லை

கணக்கிடவில்லை

ஆனால், இதுகுறித்துக் கருத்துக் கூறிய விமானப்படை தளபதி தனோவா, "குறி வைத்துதான் தாக்குதல் நடத்தினோம். ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது கணக்கிடவில்லை" என்று சொல்லி இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

250 பேர் பலி?

250 பேர் பலி?

இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் அமித்ஷா பேசும்போது, நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறினார். எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருவதுதான் இப்போது விவகாரமாக மாறியிருக்கிறது.

அமித்ஷா கருத்து

அமித்ஷா கருத்து

இது சம்பந்தமாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாஜக தலைவர் அமித்ஷா இந்திய விமானப்படை தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்கிறார்.

ஏன் அமைதி?

ஏன் அமைதி?

ஆனால், எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என புகழ்பாடும் அவரது குருவான பிரதமர் மோடியோ, இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்? தீவிரவாதிகள் கொல்லப்பட்டது என்னவோ நல்ல செய்திதான். ஆனால், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அமைதியாக ஏன் இருக்கிறார்? அமைதிக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்தான் என்ன?

கவலை தருகிறது

பாஜக அரசின் பொருளாதார வளர்ச்சி பயன்கள் முற்றிலுமாக ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளை சென்றடையவில்லை. இது ரொம்பவும் கவலை தரும் விஷயமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Mayavathi questioned, Why is PM Modi silent on Amit Shahs 250 terrorists killed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X