லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. பிராமணர்களுக்கு அதிக சீட்.. பாஜகவுக்கு கட்டையைக் கொடுக்கும் மாயாவதி

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலில் பிராமண சமுதாயத்தினருக்கு அதிக சீட் கொடுத்து பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

நாட்டிலேயே அதிகபட்ச எம்.பி தொகுதிகள் உ.பியில் தான் உள்ளது. இதனால் இங்கு பெருமளவில் வெற்றியை அள்ள காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

ஆனால் ஆளுக்கு முந்தியாக பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் அதிரடியாக கூட்டணியை ஏற்படுத்தி விட்டன. தொகுதிகளையும் அழகாக பிரித்துக் கொண்டு விட்டன. இதனால் பாஜக, காங்கிரஸ் பாடு திண்டாட்டமாகியுள்ளது. இந்த நிலையில் மாயாவதி அடுத்த அதிரடியை கொடுத்துள்ளார்.

கையில் எடுத்த பிராமண ஆயுதம்

கையில் எடுத்த பிராமண ஆயுதம்

நாட்டிலேயே அதிகபட்ச எம்.பி தொகுதிகள் உ.பியில் தான் உள்ளது. இதனால் இங்கு பெருமளவில் வெற்றியை அள்ள காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

காங்கிரஸுக்கும் ஆபத்து

காங்கிரஸுக்கும் ஆபத்து

உ.பி. பிராமணர்கள் பாஜகவுக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸுக்கும் ஒரு வாக்கு வங்கியாக உள்ளனர். எனவே மாயாவதியின் அதிரடி முடிவால் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

பிராமணர்களுக்கு அதிக சீட்

பிராமணர்களுக்கு அதிக சீட்

இந்த முறை லோக்சபா தேர்தலில் பிராமண சமுதாயத்தினருக்கு அதிக சீட்களை மாயாவதி ஒதுக்கியுள்ளார். இது கடந்த தேர்தல்களில் அவர் ஒதுக்கியதை விட அதிகமாகும் என்பதால் பாஜக, காங்கிரஸ் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன. கடந்த காலங்களிலும் கூட பிராமண சமுதாயத்திற்கு அதிக சீட்களை ஒதுக்கியவர் மாயாவதி என்பது நினைவிருக்கலாம்.

மாயாவதி போட்டியில் இல்லை

மாயாவதி போட்டியில் இல்லை

இந்த தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார். இதையும் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து அவர் முடிவு செய்துள்ளார். கூட்டணியை வெல்ல வைத்து பாஜக காங்கிரஸுக்கு ஆட்டம் காட்டுவதே அவரது நோக்கம். எனவே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட வசதியாக போட்டியிடுவதில்லை என்ற முடிவை மாயாவதி எடுத்துள்ளாராம்.

38 பேர் ரெடி

38 பேர் ரெடி

தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து விட்டது. அதில் பெரும்பாலானவர்கள், அதாவது முக்கால்வாசிப் பேர் பிராமணர்கள் என்று தெரிய வந்துள்ளது.

பழைய டெக்னிக்

பழைய டெக்னிக்

கடந்த 2007ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இப்படித்தான் அதிரடியாக பிராமண சமுதாயத்தினருக்கு அதிக சீட் கொடுத்து தேர்தலை சந்தித்தார் மாயாவதி. அதில் வரலாறு காணாத வெற்றி அவருக்குக் கிடைத்தது. அதே டெக்னிக்கைத்தான் இப்போது கையில் எடுத்துள்ளார்.

ஒரு ஜாதியையும் விடாதே

ஒரு ஜாதியையும் விடாதே

தலித்துகள், முஸ்லீம்கள் பிராமணர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து ஜாதியினரையும் அரவணைத்து போதிய அளவுக்கு சீட் தருவதன் மூலம் எல்லா ஜாதியினரின் வாக்குகளையும் தம் பக்கம் திருப்ப முடியும் என பகுஜன் சமாஜ் கட்சி கருதுகிறது. குறிப்பாக பிராமணர்களை வளைத்து விட்டால் பாஜக மட்டுமல்லாமல், காங்கிரஸும் சேர்ந்து காலியாகி விடும் என்பது அவர்களின் திட்டம்.

கிழக்கு உ.பி

கிழக்கு உ.பி

கிழக்கு உ.பி என்பது பாஜகவின் கோட்டையாகும். பிராமணர்களும், தாக்கூர் சமுதாயத்தினரும் பெரும்பான்மையாக உள்ள பகுதி. இங்குதான் மாயாவதி குறி வைத்துள்ளார். இந்த கோட்டையைத் தகர்த்து கைப்பற்ற அவர் வியூகம் வகுத்து வருகிறார். இங்கு மட்டும் 6 பிராமண வேட்பாளர்களை அவர் களம் இறக்குகிறார்.

மாயாவதியின் வேகத்தைப் பார்த்து பாஜகவும், காங்கிரஸும் மிரண்டு போயுள்ளனவாம். யோகி ஆதித்யநாத்துக்கு மட்டுமல்லாமல் பிரியங்கா காந்திக்கும் கூட உ.பி. தேர்தல் மிகப் பெரிய சவால் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
BPS leader Mayawati has taken Brahmin vote bank in hand and fielding more OC candidates in the LS polls to tame both BJP and Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X