லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதென்ன் புதுக்கதை... மாயாவதியும் தேர்லுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு தருவாராமே!

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி ஆதரவு தருவார் என திட்டவட்டமாகக் கூறுகிறார் அவரது மாஜி உதவியாளர் நசீமுதின் சித்திக்.

மாயாவதிக்கு உதவியாளராக இருந்த நசீமுதீன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். தற்போதைய பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியானது பாஜகவுக்கு பெரும் தோல்வியையே தரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Mayawati Will Join Hands With BJP After Results, Claims Her Ex-Aide

இந்நிலையில் இந்த மெகா கூட்டணி குறித்து நசீமுதீன் கூறியுள்ளதாவது:

கடந்த காலங்களில் பாஜகவுடன் மாயாவதி கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். மே 23-ந் தேதிக்குப் பிறகு அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டால் பாஜக கூட்டணிக்கே திரும்பிவிடுவார்.

அரசியலில் எதுவுமே சாத்தியமில்லை என்பது கிடையாது. மாயாவதியை 33 ஆண்டுகாலமாக நன்கு அறிவேன். அவருக்கு அவரை விட எனக்கே நன்கு தெரியும். அடுத்த பிரதமர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து என்றுதான் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

பாஜகவுடன் ஸ்டாலின் பேசியதற்கான ஆதாரம் தமிழிசையிடம் உள்ளது... அமைச்சர் கடம்பூர் ராஜு பாஜகவுடன் ஸ்டாலின் பேசியதற்கான ஆதாரம் தமிழிசையிடம் உள்ளது... அமைச்சர் கடம்பூர் ராஜு

மாயாவதியை பிரதமராக்குவதாக அகிலேஷ் கூறவில்லையே? அகிலேஷ் யாதவுக்கு வேறுவழியும் இல்லை. அவர் காங்கிரஸ் அணியைத்தான் ஆதரிப்பார்.

இவ்வாறு நசீமுதீன் தெரிவித்தார்.

English summary
Mayawati ex-aide Naseemuddin Siddiqui claimed that She will be under so much pressure after the election results that she will join hands with the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X