லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே முஸ்லிம்களுக்கு சிகிச்சை.. மீரட் மருத்துவமனை சர்ச்சை

Google Oneindia Tamil News

லக்னோ: மீரட்டில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனை வெள்ளிக்கிழமை வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம் நோயாளிகள் கொரோனா வைரஸ் இல்லை என்று பரிசோதித்து விட்டே சிகிச்சை பெற வேண்டும் என்று விளம்பரத்தில் அறிவுறுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு புற்று நோய் மருத்துவமனை ஒரு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் முஸ்லீம் நோயாளிகள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பரிசோதித்து நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியது. மேலும், முஸ்லீம் நோயாளிகளுடன் இருக்கும் கவனிப்பாளரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக பரிசோதித்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வாலண்டிஸ் புற்றுநோய் மருத்துவமனை தினசரி நாளிதழ் ஒன்றில் இந்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தது, அந்த விளம்பரத்தில் பல முஸ்லீம் நோயாளிகள் முகமூடியைப் பயன்படுத்துதல் மற்றும் தூய்மையைப் பேணுதல் மற்றும் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விதிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றவில்லை என்றும் கூறியிருந்தது.

கொரோனா: மதுரை அருகே குண்ணத்தூரில்.. உண்டியல் பணத்தை முதல்வர் நிதிக்கு கொடுத்த மாணவன்!கொரோனா: மதுரை அருகே குண்ணத்தூரில்.. உண்டியல் பணத்தை முதல்வர் நிதிக்கு கொடுத்த மாணவன்!

சிலருக்கு விலக்கு

சிலருக்கு விலக்கு

அந்த விளம்பரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவதற்கு அனைத்து முஸ்லிம்களும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் முடிவுகளுடன் வர வேண்டும் என்று கூறியிருந்தாலும், விளம்பரத்தில் சில விலக்குகளையும் பட்டியலிட்டது. அதன்படி மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிக முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசிக்காத முஸ்லிம்களுக்கும் இந்த விதி பொருந்தாது" என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

பிரச்சனை வேண்டாம்

பிரச்சனை வேண்டாம்

இந்த விளம்பரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து புகார்கள் வந்தவுடன், விளம்பரம் பாகுபாடற்றது அல்ல என்று மருத்துவமனை கூறியது, ஆனால் பின்னர் மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அமித் ஜெயின் கூறுகையில்,, எங்கள் சுகாதார அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டும், அனைவருக்கும் ஆபத்தானது என்பதால் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று நாட்டின் அனைத்து மக்களிடமும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மருத்துவமனை விளக்கம்

மருத்துவமனை விளக்கம்

எங்கள் நோயாளிகளில் எழுபது சதவீதம் பேர் முஸ்லிம்கள், கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் எங்கள் மருத்துவமனையில் புற்றுநோயால் குணப்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் தவறான பிரச்சாரத்தை உருவாக்குகிறார்கள். இருப்பினும் விளம்பரத்தில் சில வார்த்தைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை தவறாக எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

போலீசார் வழக்குப்பதிவு

போலீசார் வழக்குப்பதிவு

இதனிடையே இந்த விதிமுறையைத் திரும்பப் பெற மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை ரத்து செய்யாவிட்டால் மருத்துவமனையின் உரிமத்தை இழக்க வேண்டியது வரும் என எச்சரித்தது. இதனிடையே சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்ட மருத்துவமனை மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

English summary
Muslim patients to seek treatment at its facility only if they’ve tested negative for Covid-19: Meerut cancer hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X