லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் குப்பை பஸ்கள்.. எதுக்கு இப்படி ஒரு அரசியல்.. பிரியங்கா மீது பாய்ந்த.. ரேபரேலி காங். எம்எல்ஏ

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் பெண் எம்எல்ஏ விமர்சித்து உள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: "வெறும் குப்பை பஸ்கள்.. இது ஒரு க்ரூயல் ஜோக்... இப்படி ஒரு சின்ன பிள்ளைத்தனமான அரசியல் தேவைதானா? பஸ்கள் இருந்தால், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிராவுக்கு ஏன் அனுப்பலை? அன்னைக்கு ராஜஸ்தானில் மாணவர்கள் தவித்தபோது உதவிக்கு வந்தது யோகி ஆதித்யநாத்தான்" என்று ரேபரேலி தொகுதி எம்எல்ஏ அதிதி சிங் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளர். இப்படி வாய்க்கு வந்ததெல்லாம் அதிதி பேசியது எதிர்க்கட்சியினரை பார்த்து இல்லை.. சொந்த கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி குறித்துதான் இந்த காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

லாக்டவுன் போட்டதில் இருந்தே கடுமையான அவஸ்தைக்கு உள்ளாகி வருபவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்தான்.. இவர்களின் அவலம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.. யாருக்கும் வேலை இல்லாததால், யாரிடமும் காசு இல்லை.

அதனால் சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.. பலர் பசியிலேயே சுருண்டு விழுந்து கொண்டிருக்கிறார்கள்.. சிலர் உயிரிழக்கும் கொடுமையும் நடக்கிறது.. கிட்டத்தட்ட 3 மாதமாகவே இவர்களின் இன்னல்கள் துடைத்தெறியப்படவில்லை.

வீடியோவில் படு நெருக்கம்.. அந்த விஐபி மனைவி யார்?.. பரபரக்கும் நாகர்கோவில் காசியின்.. லீலைகள்வீடியோவில் படு நெருக்கம்.. அந்த விஐபி மனைவி யார்?.. பரபரக்கும் நாகர்கோவில் காசியின்.. லீலைகள்

 பசி, பட்டினி

பசி, பட்டினி

மத்திய அரசு இத்தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள் அறிவித்தாலும், இப்போதைய அவர்களின் பசி தேவையை போக்கமுடியவில்லை.. இந்த சமயத்தில்தான் காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தை சீரியஸாக கையில் எடுத்தது.. ராகுல்காந்தி வீதிக்கு வந்து இந்த தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்தார்.. டெல்லி பிளாட்பாரங்களில் அவர்களை சந்தித்து, ஆறுதல் சொல்லி பிரச்சனைகளை கேட்டறிந்து, போக்குவரத்து வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்தார்.

 தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

அதுபோலவே, உத்தர பிரதேசத்தில் சிக்கியுள்ள பல்வேறு மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் களத்தில் இறங்கினார்.. அவரது உத்தரவுப்படி, ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.... ஆனால், இதற்கு உபி அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளும் போடப்பட்டு வருகிறது.

 நேரடி மோதல்

நேரடி மோதல்

இதனால், இம்மாநில அரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி மோதலே உருவாகிவிட்டது.. இந்த சூழலில் ரேபரேலி தொகுதி எம்எல்ஏ அதிதி சிங் பிரியங்காவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.. பஸ் ஏற்பாடு செய்தது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரையே அதிதி குற்றஞ்சாட்டி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் அனுப்பிய பஸ்களில் பெரும்பாலானவை சின்ன சின்ன வண்டிகள்தான்.

 குப்பை பஸ்கள்

குப்பை பஸ்கள்

அனுப்பப்பட்ட ஆயிரம் பஸ்களின் லிஸ்ட்டில் பாதிக்கும் மேல் போலிதான்.. 297 குப்பை பஸ்கள் அதில் உள்ளன.. 98 ஆட்டோ ரிக்ஷாக்கள், ஆம்புலன்ஸ் வண்டிகள் இருக்கின்றன... மீதமுள்ள 68 வண்டிகளுக்கு எந்த ரிக்கார்டும் சரியாக இல்லை. இதெல்லாம் ஒரு "க்ரூயல் ஜோக்".. கொடூரமான நகைச்சுவை.. ஒரு பேரழிவு நடந்து கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு சின்னபிள்ளை தனமான அரசியல் தேவையா? பஸ்கள் இருந்தால், ராஜஸ்தானுக்கும், பஞ்சாப்புக்கும், மகாராஷ்டிராவிற்கும் அனுப்ப வேண்டியதுதானே? ஏன் அனுப்பலை?

 யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

ராஜஸ்தானில் கோட்டா நகரில், அன்னைக்கு ஆயிரக்கணக்கான உபி மாணவர்கள் சிக்கி கொண்டு தவித்தார்களே, அப்போ அங்கே ஏன் பஸ்களை அனுப்பலை? காங்கிரஸ் அரசால், அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை... எல்லையில் கூட அவர்களால் கொண்டு போய் பத்திரமாக விட முடியவில்லை.. ஆனால் யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால்தான் அன்னைக்கு அவர்கள் உ.பிக்கு அழைத்து வரப்பட்டனர்... இந்த செயலை ராஜஸ்தான் முதலமைச்சரும் பாராட்டினார்" என்று பதிவிட்டுள்ளார்.

 சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

சொந்த கட்சியையே, அதுவும் பொதுச்செயலாளரையே எம்எல்ஏ விமர்சித்திருப்பது அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.. அத்துடன் யோகியை ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளது அக்கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதிதி சிங் ஒழுங்கீனப் போக்கு காரணமாக கட்சியின் மகளிர் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

English summary
migrant workers: rabel congress mla aditi singh attacks priyanka gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X