லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாலையை சுத்தம் செய்ய குடிநீர்.. 1.4 லட்சம் லிட்டர் வீணானது.. மோடி பேரணிக்காக நடந்த ஒருநாள் கூத்து!

பிரதமர் மோடியின் வாரணாசி பேரணிக்காக நேற்று அந்த நகரம் முழுக்க குடிநீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் பேரணிக்காக வீணாக்கப்பட்ட 1.4 லட்சம் லிட்டர் குடிநீர்

    லக்னோ: பிரதமர் மோடியின் வாரணாசி பேரணிக்காக நேற்று அந்த நகரம் முழுக்க குடிநீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி இன்று வாரணாசியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக நேற்று அவர் பெரிய சாலை பேரணியை வாரணாசியில் நடத்தினார். இதில் பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலை மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மோடி இந்த பேரணியை தொடங்கினார். இந்த ரோட் ஷோ கங்கை நதி தீரம் வரை நடைபெற்றது.

    3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க பரிந்துரை.. இந்த ஒரு புகைப்படம்தான் பிரச்சனைக்கு காரணம்! 3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க பரிந்துரை.. இந்த ஒரு புகைப்படம்தான் பிரச்சனைக்கு காரணம்!

    என்ன ஆர்டர்

    என்ன ஆர்டர்

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி பேரணியை அடுத்து நேற்று முதல் நாள் வாரணாசி முழுக்க சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து சாலைகளும் மீண்டும் போடப்பட்டு, தெரு ஓரங்கள் அலங்காரம் செய்யப்பட்டது. முக்கியமாக பிரதமர் மோடி செல்லும் சாலை பார்த்து பார்த்து அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    துடைத்து எடுத்தனர்

    துடைத்து எடுத்தனர்

    இதற்காக அதிக அளவில் தண்ணீர் வீணாக்கப்பட்டது. மொத்தம் வாரணாசியில் உள்ள 40க்கும் அதிகமான தண்ணீர் டேங்குகள் இதற்காக மொத்தமாக துடைத்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது . 400 பணியாளர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டார்கள். மேலிடத்தில் இருந்து நேரடியாக வந்த ரிப்போர்ட் இது என்கிறார்கள்.

    மொத்தம் எவ்வளவு

    மொத்தம் எவ்வளவு

    இதற்காக மொத்தம் 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க குடிநீர் ஆகும். நல்ல நிலையில் குளோரின் போட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலையை துடைக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    தண்ணீர் இல்லை

    தண்ணீர் இல்லை

    இதனால் இன்று வாரணாசியில் மக்கள் தண்ணீர் வராமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 45% வீடுகளுக்கு வாரணாசியில் இன்று தண்ணீர் வரவில்லை. அதேபோல் தண்ணீர் லாரிகள் எதுவும் தண்ணீர் இல்லாததால் இன்று குடிநீர் சப்ளை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Modi Varanasi Rally: 1.4 lakh liters of drinking water waster to clean the road in Varanasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X