லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கும்பமேளாவில் மோடி முங்கி எழுந்தது வீண் போகவில்லை.. பாஜகவினர் கொண்டாட்டம்!

கும்பமேளாவில் பிரதமரின் வேண்டுதலே இன்று நிறைவேறி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கும்பமேளாவில் மோடி முங்கி எழுந்தது வீண் போகவில்லை.. வீடியோ

    லக்னோ: கும்பமேளாவில் பிரதமர் மோடி முங்கி எழுந்தது வீண் போகவில்லை.. அவரது வேண்டுதல் இன்று நிறைவேறி நாட்டு மக்களின் கோபத்தை தணித்து வருகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரம் இந்துக்களின் புனிதமான ஸ்தலமாகும். அதிலும் இங்கு நடக்கும் கும்பமேளா ரொம்பவும் விசேஷமானது.

    ஏனெனில் கங்கை, யமுனா, சரஸ்வதி என திரிவேணிகள் சங்கமிக்கும் இடம் என்பதால், உலகம் முழுசும் இருந்து கோடிக்கணக்கானோர் வந்து நீராடுவார்கள். இந்த விழா இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    வைரல் வீடியோ

    இந்தநிலையில், பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கும்பமேளாவில் புனித நீராடினார். அதோடு விடாமல், அந்த ஆற்றுக்கு ஆரத்தி காட்டினார். அதற்கு மேலும் போய் துப்புரவு தொழிலாளிகளின் காலை கழுவி விட்டார். இந்த போட்டோக்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.

    ஹேஷ்டேக்

    ஹேஷ்டேக்

    5 வருடமாக செய்த பாவத்தை கழுவுகிறார் மோடி என்றுகூட மாயாவதி உள்ளிட்ட பலர் விமர்சனங்கள் செய்தனர். இதைவிட ஹைலைட் என்னவென்றால், #ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா என்ற ஹேஷ்டேக் ஒன்று உருவாக ஆரம்பித்துவிட்டது.

    அசம்பாவிதம்

    அசம்பாவிதம்

    ஆனால் மோடி உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தர வேண்டும் என்றே கங்கையில் மூழ்கி வேண்டி கொண்டுள்ளாராம். 5 வருட ஆட்சியில் பல நல்லது கெட்டது இருந்தாலும், பதவி முடியும்போது இப்படி ஒரு அசம்பாவிதமும், கோர தாக்குதலும் மோடிக்கு கடுமையான எதிர்ப்பை சம்பாதித்து தந்துள்ளதாக நினைத்தாராம்.

    வீண் போகவில்லை

    வீண் போகவில்லை

    அதனால் தக்க பதிலடியை பயங்கரவாதிகள் மீது நடத்தி, எதிர்நாட்டுக்கு கிலி தர வேண்டுமென்றே நினைத்து கும்பமேளாவில் வேண்டுதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ நீரில் முங்கி எழுந்தது வீண் போகவில்லை.. பயங்கரவாதிகள் கூடாரங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன என்ற செய்தி இந்திய மக்களின் மனசை குளிர்வித்து வருகிறது.

    English summary
    The reason for success in IAF demolishes is that PM Modi's holy dip at Kumbhamela is said
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X