லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா ரத்த மாதிரிகளை பிடுங்கி சென்ற குரங்குகள்.. குடியிருப்புகளில் சுற்றுவதால் மக்கள் அச்சம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளுடன் சென்று கொண்டிருந்த லேப் டெக்னீசியனை தாக்கிவிட்டு அந்த ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    கொரோனா ரத்த மாதிரிகளை பிடுங்கி சென்ற குரங்குகள்... உ.பி.யில் அதிர்ச்சி

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களுக்கும் ஏற்கெனவே கொரோனா உறுதியாகி சிகிச்சைக்கு பின்னர் அந்த வைரஸ் இருக்கிறதா இல்லை நெகட்டிவ் என வருகிறதா என பார்ப்பதற்கும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    உடல்நலம் பாதித்த கேரள இளைஞர்.. கொரோனா அச்சத்தால் மரத்தடியில் சிகிச்சை அளித்த குமரி மருத்துவமனைஉடல்நலம் பாதித்த கேரள இளைஞர்.. கொரோனா அச்சத்தால் மரத்தடியில் சிகிச்சை அளித்த குமரி மருத்துவமனை

    கொரோனா

    கொரோனா

    இந்த நிலையில் மீரட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் 3 நபர்களுக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு கொரோனா நோய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு ஆய்வகப் பணியாளர்கள் தங்கள் ஆய்வகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    சுவை

    சுவை

    அப்போது அவர்களை தாக்கிய குரங்குகள் கூட்டம் அவர்களின் கையிலிருந்த ரத்த மாதிரிகளை பறித்து சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் சுதாரிப்பதற்குள் ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டன. அந்த குரங்குகளில் ஒரு குரங்கு ரத்த மாதிரியை சுவை பார்த்துக் கொண்டிருந்தது.

    கொரோனா

    கொரோனா

    குரங்குகளின் அச்சுறுத்தல்கள் இப்பகுதியில் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த குரங்குகளில் சில ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றதால் கொரோனா பரவிவிடும் என்ற பீதியில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

    ரத்த மாதிரிகள்

    ரத்த மாதிரிகள்

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதோடு மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. ஒரு முறை குரங்கிற்கு நோய் தொற்று ஏற்பட்டு அது உயிர் பிழைத்தால் அவை நோயிலிருந்து விடுபடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. ரத்த மாதிரிகளை குரங்குகள் பறித்துச் சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மீரட் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    English summary
    Uttar Pradesh Meerut District monkeys run away with Covid 19 test samples in Uttar Pradesh. People fears for spread of infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X