லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக வேட்பு மனுதாக்கல் செய்ய குவிந்த விவசாயிகள்.. திடீர் போராட்டம்

Google Oneindia Tamil News

லக்னோ: வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக வேட்புனு தாக்கல் செய்ய சென்ற தெலுங்கானா மாநில மஞ்சள் விவசாயிகள், அனைவரையும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பயிருக்கு ஆதார விலையை நிர்ணயிக்க தவறியதாக புகார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.5200 விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.3200க்குத்தான் விற்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

more than 50 farmers files nominations in Varanasi against Modi

இந்நிலையில் தங்கள் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தவறியதாக குற்றம்சாட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போவதாக தெலுங்கானாவின் 50 விவசாயிகள் அறிவித்தனர்.

இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல்.. வீடியோ வெளியிட்ட மதுரை நபர் இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல்.. வீடியோ வெளியிட்ட மதுரை நபர்

இதேபோல் தமிழகத்தைச்சேர்ந்த விவசாயிகளும் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடுதற்காக வாரணாசி வந்தனர். இந்நிலையில் அனைத்து விவசாயிகளையும் வேட்பு மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக விவசாயிகள் புகார் கூறி இன்று போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் வேட்பு மனுதாக்கல் செய்துவிடடு வெளியே வந்த விவசாயிகள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பிரதமர் மோடிக்கு எதிராக மனு தாக்கல் செய்ததாக பேட்டி அளித்தனர்.

English summary
lok sabha elections 2019: more than 50 farmers files nominations in Varanasi, contest against Narendra Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X