முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முலாயம்சிங்குக்கு இன்று மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் முலாயம்சிங் யாதவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் தொடர்ந்தும் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்
இருப்பினும் இன்று இரவே முலாயம்சிங் யாதவ் வீடு திரும்புவார் என்று சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!