லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிரிக்கு எதிரி நண்பன்.. பரம வைரிகள் முலாயம் சிங், மாயாவதி இன்று பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி

Google Oneindia Tamil News

லக்னோ: எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்வார்கள், அப்படித்தான் இதுவரை பரம வைரிகளாக இருந்து முலாயம்சிங் யாதவும், மாயாவதியும் பாஜகவுக்கு எதிரான கூட்டணியின் மூலம் இன்று நடக்கும் பிரம்மாண்டமான பேரணியில் ஒன்றாக பங்கேற்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்தும் நோக்குடன் பரம வைரிகளாக இருந்து வந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.

இதன் காரணமாக இந்த கட்சிகள் தலைவர்கள் இணைந்து பங்கேற்கும் பிரம்மாண்டமான பேரணி உத்தரப்பிரதேச மாநிலம் மைன்பூரியில் இன்று நடக்கிறது.

எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம் எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம்

பங்கேற்கிறார்கள்

பங்கேற்கிறார்கள்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி, மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவர் அஜித் சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

தொண்டர்கள் மகிழ்ச்சி

தொண்டர்கள் மகிழ்ச்சி

இந்த கூட்டத்தில் மூன்று கட்சிகளை சேர்ந்த பல ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளார்கள். இதனால் மைன்புரி நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. இன்றைய பேரணி பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர்க்கும் என அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

24 வருட பகை

24 வருட பகை

1995ம் ஆண்டு சமாஜ்வாதி தொண்டர்கள், தாக்கியதால், பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி உடனடியாக கோபித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தார். அதன்பிறகு மாயாவதியும், முலாயம்சிங் யாதவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை. இப்போது தான் இருவரும் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்.

கூட்டணி

கூட்டணி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்று பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் சமாஜ்வாதியும், பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளன.

English summary
Samajwadi Party founder Mulayam Singh Yadav and BSP chief Mayawati share a stage at a joint rally of the alliance in Mainpuri today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X