லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங் யாதவுக்கு 80 வயதாகிறது. கடந்த காலங்களைப் போல தீவிர அரசியலில் இல்லாமல் இருந்து வருகிறார்.

பீகார் தேர்தல்: மேலும் 35 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக! அக். 22ல் பிரதமர் மோடி பிரசாரம்பீகார் தேர்தல்: மேலும் 35 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக! அக். 22ல் பிரதமர் மோடி பிரசாரம்

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

அவரது மகனும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்கட்சியை வழிநடத்தி வருகிறார். கடந்த மாதம் முலாயம்சிங் யாதவுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது. அப்போது மேதாந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா நெகட்டிவ்

கொரோனா நெகட்டிவ்

அப்போது முலாயம்சிங்குக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் நெகட்டிவ் என முடிவுகள் வந்தன. இதனையடுத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முலாயம்சிங் யாதவ் பங்கேற்றார்.

நாடாளுமன்ற கூட்டத்தில்..

நாடாளுமன்ற கூட்டத்தில்..

வீல்சேரில் அமர்ந்தபடி நாடாளுமன்ற கூட்டத்துக்கு முலாயம்சிங் வருகை தந்திருந்தார். உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார் முலாயம்சிங். இந்த நிலையில் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் முலாயம்சிங்குக்கு இல்லாமல் இருந்தது. தற்போது மருத்துவர்களின் முழு கண்காணிப்பில்தான் முலாயம்சிங் இருந்து வருகிறார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Former Uttar Pradesh chief minister Mulayam Singh Yadav has tested positive for coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X