லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெய்ஸ்ரீராம் சொல்லாததால் தீ வைப்பு என சிறுவன் வாக்குமூலம்.. பொய் என போலீஸார் மறுப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மாவட்டத்தில் 15 வயது முஸ்லீம் சிறுவன் ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்ததால் அவர் மீது 4 பேர் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது முஸ்லீம் சிறுவன். இவரை 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் கடத்தி ஹாதீஜா என்ற கிராமத்தில் அடைத்துவைத்தது.

பின்னர் அந்த சிறுவனை ஜெய்ஸ்ரீராம் என சொல்லுமாறு அந்த 4 பேரும் மிரட்டினர். எனினும் சிறுவன் முஸ்லீம் என்பதால் அதை சொல்ல மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அந்த சிறுவன் மீது தீ வைத்தனர்.

கிளி ஜோசியம்.. குடுகுடுப்பை ஜக்கம்மா.. பகுத்தறிவு திமுக இப்படி இறங்கிருச்சே!கிளி ஜோசியம்.. குடுகுடுப்பை ஜக்கம்மா.. பகுத்தறிவு திமுக இப்படி இறங்கிருச்சே!

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதில் 60 சதவீத காயங்களுடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் போலீஸாரோ இந்த வாக்குமூலத்தை மறுக்கின்றனர்.

மாற்றுக் கருத்து

மாற்றுக் கருத்து

இதுகுறித்து சந்தாலி மாவட்ட போலீஸார் கூறுகையில் அந்த சிறுவன் சொல்வது பொய். அவராகவே தன் மீது தீவைத்துக் கொண்டார். 45 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான கருத்தை கூறி வருகிறார்.

கும்பல்

கும்பல்

சிறுவன் கூறிய இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தோம். ஆனால் அதில் சிறுவன் எந்த இடத்திலும் இல்லை. அந்த சிறுவன் முதலில் கூறிய போது மகாராஜ்பூர் கிராமத்தில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட தன்னை 4 பேர் கொண்ட கும்பல் வயல்வெளியில் இழுத்து தள்ளியது.

திசை

திசை

பின்னர் தன் மீது தீவைத்ததாக கூறியுள்ளார். அதன் பின்னர் மருத்துவமனையில் தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தி ஜெய்ஸ்ரீராம் கூறாததற்காக தீவைத்ததாக கூறியுள்ளார். இது போல் இருவேறு கருத்துகளை கூறி வருகிறார். மேலும் சிறுவன் கூறிய மகாராஜ்பூர் மற்றும் ஹாதீஜா ஆகிய கிராமங்கள் வெவ்வேறு திசைகளில் உள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.

English summary
Muslim boy in UP set on fire for not chanting JaiShri Ram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X