லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எதுக்கு தாடி வச்சீங்க".. முஸ்லீம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உ.பியில் அராஜகம்!

தாடி வைத்திருந்த இஸ்லாமிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

லக்னோ: தாடி வைத்ததற்காக ஒரு இஸ்லாமிய காவல்துறை துணை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்... இப்படி ஒரு கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உபி மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த சார்அலி.. ரமலா பகுதியில் உள்ள ஸ்டேஷனில் துணை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

Muslim Cop Suspended for Sporting Beard in Uttar Pradesh

இவர் நீண்ட தாடி ஒன்று வைத்திருக்கிறார்... அந்த தாடியுடன்தான் வேலை பார்த்து வந்தார்.. இந்நிலையில், இவரை திடீரென பாக்பத் மாவட்டத்தின் காவல்துறை தலைமை அதிகாரி அபிஷேக் சிங் இவரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்.. இதற்கு காரணம், உரிய அனுமதியின்றி தாடி அலி, தாடி வைத்திருந்தாராம்.

இது குறித்து எஸ்பி அபிஷேக் சிங் சொல்லும்போது, "கடந்த 3 வருஷமாக அலி போலீசாக இங்கு வேலை பார்த்து வருகிறார்.. ஆனால், அதிகாரிகளின் அனுமதியில்லாமல் நேற்று முதல் அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்... பலமுறை அவருக்கு சொல்லியாச்சு. நிறைய முறை அட்வைஸ் செய்தும், அவர் விதிகளை மீறி இப்படி நடந்து கொண்டுள்ளார்.

தாடி எடுக்கணும் அல்லது தாடி வைத்துக்கொள்ள உயரதிகாரிகளின் ஒப்புதலையாவது பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினோம். இது சம்பந்தமாக அவருக்கு ஏற்கனவே நோட்டிசும் அனுப்பப்பட்டிருக்கு.. இருந்தாலும் அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை" என்றார்.

நடந்த சம்பவம் குறித்து இந்தசார் அலி சொல்லும்போது, "1994 ல் கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தேன்.. அப்பவே லேசான தாடி இருந்தது.. அந்த தாடி இப்போது நீளமாகிவிட்டது.. அவ்வளவுதான்.. சென்ற வருடம் நான் லீவு கேட்டபோது, சூப்பிரண்ட் பிரதாப் கோபேந்திர யாதவ் என்னிட்ட என்னுடைய நீளமான தாடி பற்றி கேட்டார்..

நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அங்கெல்லாம் எனக்குஇப்படி ஒரு பிரச்சனை வந்தது இல்லை.. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை பெர்மிஷன் கேட்டு லெட்டர் அனுப்பியிருக்கேன்.. ஆனாலும் அதில் ஒன்றிற்கு கூட இதுவரை பதில் இல்லை" என்றார்.

English summary
Muslim Cop Suspended for Sporting Beard in Uttar Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X