அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.90 லட்சம்! சொத்துக்களை விற்று கொடுக்கும் இஸ்லாமியர்! உபியில் நெகிழ்ச்சி!
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்று நன்கொடை அளிக்க இஸ்லாமிய குடும்பத்தினர் முன் வந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அது ராமர் பிறந்த இடம் என்றும் அங்கேதான் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து அமைப்புகளை நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது
இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?
பாரதிய ஜன சங்கம், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம், விஎச்பி எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் , பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் பாபர் மசூதியை இடித்தனர்.

அயோத்தி ராமர் கோவில்
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி அங்கு மசூதி கட்டிக் கொள்ளவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி ஷேத்ர அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அந்த அறக்கட்டளையின் மூலம் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டினர் . இதை அடுத்து அங்கு கோவில் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

90 லட்சம் நன்கொடை
இதற்காக பலரும் நன்கொடை அளித்து வரும் நிலையில் இஸ்லாமிய மக்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் இருந்து நன்கொடைகள் குவிகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்று நன்கொடை அளிக்க இஸ்லாமிய குடும்பத்தினர் முன் வந்துள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் கலபாரில் வசிக்கும் டாக்டர் முகமது சமர் கஜினி, ராமர் கோயில் கட்டுவதற்காக தனது தனிப்பட்ட சொத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் சுமார் 90 லட்சத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

யோகி எதிரானவர் அல்ல
ராமர் கோவில் கட்டவும் முஸ்லிம்களும் அயோத்தி மற்றும் காவியை நேசிக்கிறார்கள் என்ற செய்தியை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்வதற்காக இதனை செய்வதாகவும் சமர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவி உடை அணிந்து ரமலான் தொழுகையை நடத்தியவர்தான் சமர் கஜினி என்பது குறிப்பிடத்தக்கது. முகமது சமர் கஜினி பாஜக சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் என்பதும்,
பாஜகவின் மீதான பற்று காரணமாகவும், யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகளாலும் கவரப்பட்ட அவர் ராமர் கோயிலுக்காக தங்கள் சொத்துக்களை தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

காவிக்கு ஆதரவு
யோகி எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல என்றும், குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு மட்டுமே எதிரானவர் என்றும் கூறிய சமர், இது எங்களின் 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து, இதை நாங்கள் அயோத்தியின் பெயரில் நன்கொடையாக அளித்து யோகி ஜிக்கு வழங்குவோம். பிரார்த்தனையில் நாங்கள் அணிந்திருந்த காவி உடையின் மூலம் நாங்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். யோகி ஜியின் அணிந்திருக்கும் காவி நிறம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ எதிரானது அல்ல என்பதை முழு நாட்டிற்கும் தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.