லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நரேந்திர மோடி"... குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய தம்பதியினர் தங்களது குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டியுள்ளனர்.

நடந்த முடிந்த 17 வது மக்களவைத் தேர்தலில், 303 இடங்களில் வென்று தனிபெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வருகிற 30 ம் தேதி, பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Muslim Family names their newborn son Narendra Modi

கடந்த 23 ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. 340 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றின. காங்கிரஸ் கூட்டணி 80 க்கும் மேற்பட்ட இடங்களே மட்டுமே தக்கவைத்தது.

நானாக சென்று அமைச்சர் பதவி கேட்க மாட்டேன்.. கொடுத்தால் ஏற்க தயார்.. கர்நாடக எம்பி உமேஷ் ஜாதவ் நானாக சென்று அமைச்சர் பதவி கேட்க மாட்டேன்.. கொடுத்தால் ஏற்க தயார்.. கர்நாடக எம்பி உமேஷ் ஜாதவ்

இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தை சேர்ந்த மெனாஜ் பேகம் என்பவருக்கு, வாக்கு எண்ணிக்கை நாளான 23 ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றிப்பெற்றதால், அதனை நினைவு கூறும் வகையில் தனது குழந்தைக்கு நரேந்திர மோடி என மெனாஜ் பேகம் பெயர் சூட்டினார்.

தனது குழந்தை நரேந்திர மோடியை போல நல்ல பணிகளை செய்து, அவரை போல வெற்றிப்பெற்ற மனிதராக வர வேண்டும் என ஆசைப்படுவதாக மெனாஜ் பேகம் தெரிவித்துள்ளார். மெனாஜ் பேகத்தின் கணவர் துபாயில் இருக்கிறார்.

நரேந்திர மோடி வென்றுவிட்டாரா என்று கேட்ட கணவரிடம், குழந்தைக்கு "நரேந்திர மோடி" பெயரை சூட்டலாம் என தெரிவித்த போது, எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் மெனாஜ் பேகம் கூறினார்.

English summary
Gonda: Family names their newborn son 'Narendra Modi'. Menaj Begum, mother says, "My son was born on 23 May, I called my husband who is in Dubai&he asked 'Has Narendra Modi won?' so I named my son Narendra Modi. I want my son to do good work like Modi ji&be as successful as him."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X