லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

15 கி.மீ ஒலிக்கும்.. 2.1 டன் எடை.. அயோத்தி ராமர் கோயில் மணியை உருவாக்கிய இந்து- முஸ்லீம் நண்பர்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்காக 2100 கிலோ கொண்ட பித்தளை மணியை முஸ்லீம் சமூக கைவினைஞர் இக்பால் மிஸ்திரி உருவாக்கியுள்ளார்.

என்னதான் இந்து, முஸ்லீம் என சமூக வேறுபாடுகளை சிலர் பார்த்து வந்தாலும் அவர்களுக்கிடையே உள்ள நட்பை யாராலும் பிரிக்க முடியாது என்பது புராண காலங்களில் இருந்து வந்த உண்மையாகும்.

சபரிமலையை எடுத்துக் கொண்டால் ஐயப்பன் கோயிலுக்கு பக்கத்தில் வாவர்சாமிக்கு மசூதி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் வாவர் சாமியை வழிப்பட்டு விட்டுதான் ஐயனை தரிசிக்க செல்வர்.

 நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் பிரம்மாண்ட திரையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் பிரம்மாண்ட திரையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்

தந்தை முதல் நபர்

தந்தை முதல் நபர்

அது போல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக சொன்னவர் முஸ்லீம் சகோதரரான இக்பால் அன்சாரி. பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு சர்ச்சைக்குரிய இடம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என வழக்கு தொடுத்தவர்களில் இவரது தந்தை முதல் நபர்.

ஈமச்சடங்குகள்

ஈமச்சடங்குகள்

இவரது தந்தை காலத்திற்கு பிறகு சர்ச்சைக்குரிய இடம் குறித்து வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பு என்றாலும் அதை வரவேற்ற இக்பாலுக்கு அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு முதல் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அது கொரோனாவால் உயிரிழந்தவர்களில் இந்துக்களுக்கு முஸ்லீம்கள் ஈமச்சடங்குகளை செய்வதும், முஸ்லீம்களுக்கு இந்துக்கள் ஈமச்சடங்குகளை செய்வதுமாக இருக்கிறார்கள்.

தனித்தனியே

தனித்தனியே

அது போல் தற்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு மிகப் பெரிய மணியை முஸ்லீம் கைவினைக் கலைஞர் வடிவமைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தவு தயால், இக்பால் மிஸ்திரி. இருவரும் நண்பர்களாவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் கோயில் மணிகளை தனித்தனியே உருவாக்கி வருகிறார்கள்.

Recommended Video

    Ram அயோத்தியாபுரியில் தான் பிறந்தார்.. அடம்பிடிக்கும் Sharma Oli
    2,100 கிலோ எடை

    2,100 கிலோ எடை

    அந்த வகையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு இருவரும் இணைந்து மணியை உருவாக்கியுள்ளார்கள். 2,100 கிலோ எடை கொண்ட பித்தளை பணியை இருவரும் உருவாக்கியது பேசுபொருளாகியுள்ளது. இருவரும் சேர்ந்து உருவாக்கியது இதுதான் முதல்முறை. இந்த மணி பித்தளையால் ஆனது மட்டுமில்லையாம். தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு, பாதரசம் ஆகிய 8 உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த மணியின் ஒலி 15 கி.மீ தொலைவுக்கு கேட்க கூடியதாம்

    English summary
    Muslim man Iqbal Mistri cast 2.1 tonne brass bell for Ayodhya Ram Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X