லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அதில் முஷாபர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்படும் எம்எல்ஏ உள்பட இரண்டு பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கி உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2007ம் ஆண்டு பதவியேற்றது.

மொத்தம் உள்ள 403 இடங்களில் 325 இடங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது..

தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி! தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி!

யோகி அதிரடி நடவடிக்கை

யோகி அதிரடி நடவடிக்கை

முதல்வர் யோகி ஆதித்யாநாத் அண்மையில் அமைச்சரவையில் சரியாக செயல்படாத ஆறுபேரிடம் ராஜினிமா கேட்டிருந்தாராம். இந்நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி அம்மாநில நிதியமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான ராஜேஷ் அகர்வால்(76) ராஜினாமா செய்தார்.

யோகி அமைச்சரவை விரிவாக்கம்

யோகி அமைச்சரவை விரிவாக்கம்

இதையடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்த யோகி ஆதித்யா நாத், சுரேஷ் ரானா(49), ஸ்ரீ ராம் சௌகான்(65) இரண்டு பேருக்கு அதில் இடம் அளித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முஷாபர் கலவர வழக்கு

முஷாபர் கலவர வழக்கு

கடந்த 2013ம் ஆண்டு முஷாபர் நகர் கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லலப்படடனர்.. இது தொடர்பாக கிரிமினல் வழக்கு எம்எல்ஏ சுரேஷ் ராணா (தானா பவன் தொகுதி எம்எல்ஏ) மீது போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரும்பு நல வாரியத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுரேஷ் ராணாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிலுவை தொகையை பெற்றுத்தருவதில் சுரேஷ் ராணா தீவிரமாக இருந்தாராம்

தனிபொறுப்புடன் அமைச்சர் பதவி

தனிபொறுப்புடன் அமைச்சர் பதவி

மற்றொரு எம்எல்ஏவான ஸ்ரீ ராம் சௌகான் முன்னாள் லோக்சபா எம்பியாவார். இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். தன்காட்டா தொகுதி எம்எல்ஏவான இவருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

23 அமைச்சர்கள் உள்ளார்கள்

23 அமைச்சர்கள் உள்ளார்கள்

இதன் முதல்வர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் மட்டுமே பெண்கள். 6 பிராமணர்கள், 2 வைசியர்கள், 2தாகூர்கள், 10 ஒபிசி பிரிவினர் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கிறார்கள்.

English summary
Muzaffarnagar Riot-Accused MLA get minister post in UP CM Yogi Adityanath's Cabinet Expansion
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X