லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீஸார் வீடு புகுந்து பொருட்களை உடைத்து, நகை பணத்தை பறித்தனர்.. முசாபர்நகர் முஸ்லீம் குடும்பங்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: காவல்துறையினர் இரவினில் எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினர். பணம் நகை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர் என முசாபர்நகர் முஸ்லிம் குடும்பத்தினர் வேதனையுடன் குற்றம்சாட்டி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இந்நிலையில் அங்கு போராட்டங்களை ஒடுக்க உத்தரப்பிரதேச போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காவலதுறையினர் இரவினில்ல் எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினர். பணம் நகை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர் என முசாபர்நகர் முஸ்லிம் குடும்பத்தினர் வேதனையுடன் குற்றம்சாட்டி உள்ளனர்.

மத பாகுபாடு இல்லை.. பாகுபாடு காட்டுவதாக பாஜகவின் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட சாஜியா இல்மி.. விளக்கம்மத பாகுபாடு இல்லை.. பாகுபாடு காட்டுவதாக பாஜகவின் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட சாஜியா இல்மி.. விளக்கம்

கடிகாரம் உடைந்தது

கடிகாரம் உடைந்தது

ஹாஜி ஹமீத் ஹாசன் என்பவருக்கு 72 வயது ஆகிறது. அவர் தங்கள் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், 11 மணி ஆவதற்கு 3 நிமிடம் இருந்த போது (10 57 மணிக்கு) தனது பேரனை அகமதுவுடன் வந்த காவல்துறையினர் முதலில் கடிகாரத்தை அடித்து நொறுக்கினர். அப்படியே கடிகாரம் நின்று கொண்டது.. அதன்பிறகு வீட்டில் இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினர்.

எல்லோரும் காயம்

எல்லோரும் காயம்

குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பூட்டியிருந்த அலமாரி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. எங்கள் குடும்பத்தில் நான்கு ஸ்கூட்டர்கள் உள்ளன, அவை அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. திருமணத்தேதி நெருங்கிய நிலையில்இருந்த எனது 21 வயது பேத்தி ருகாய்யா தலையில் காயத்துடன் மருத்துவமனையில் உள்ளார். எனது 14 வயது பேர் அகமது உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

போராடவில்லை

போராடவில்லை

"பேருந்துகளை எரிப்பது தவறு என்று நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் ஏன் எங்களை காயப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்தேன்? எனக்கு 72 வயது, நான் போராட்டத்தில் கூட இல்லை, " இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தார்.

சூறாவளியில்

சூறாவளியில்

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஸ்வாட்டில் உள்ள ஹாஜி ஹமீத் ஹாசனின் வீடு வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு முன்பு வரை ஹாசனின் இரு பேத்திகளுக்கு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள திருமணத்திற்காக பல ஆண்டுகளாகசேர்த்து வைத்த பொருட்களுடன் கல்யாண வீடு தோற்றத்தில் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது சூறாவளியில் சிக்கிய வீடு போல் மாறிக்கிடக்கிறது.

 கடைகளுக்கு சீல்

கடைகளுக்கு சீல்

முசாஃபர்நகரில் முஸ்லீம் குடும்பங்கள் தாங்கள் போலிஸ் ஒடுக்குமுறைக்கு இலக்காகியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை மதியம் தொழுகைக்குப் பிறகு முசாஃபர்நகரின் மீனாட்சி சௌக் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. வன்முறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உடனேயே, நிர்வாகம் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தது. பல ஆண்டுகளாக, மீனாட்சி சௌக் பகுதி முஸ்லிம்கள் அதிகமாக வணிக செய்துவரும் மையாக திகழ்கிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அந்த பகுதியில் இரும்பு பட்டறை வைத்திருக்கும் அப்துல் சத்தார் கூறுகையில். "நாங்கள் கடுமையாக உழைத்ததால் மீனாட்சி சௌக்கில் ஒரு கடையைப் பெற முடிந்தது. எங்கள் கடையில் இருந்து சிவ் சௌக் ஒரு சில மீட்டர் முன்னால் உள்ளது, அது கண்டு கொள்ளாப்பபாமல் விடப்பட்டுள்ளது. முசாஃபர்நகரில் மீனாட்சி சௌக் பகுதி முஸ்லீம்களின் வணிக மையாக உள்ளது. ஒரு சமூகத்தின் வணிகர்களை மட்டும் ஏன் குறிவைக்க வேண்டும்? " என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

யோகி எச்சரிக்கை

யோகி எச்சரிக்கை

இதனிடையே கலவரம் காரணமாக இப்பகுதியில் 67 கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. கடந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது அரசு கலகக்காரர்களின் சொத்துக்களை "ஏலம் விடுவதன் மூலம்" பழிவாங்கும் என்று எச்சரித்திருந்தார்.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

முசாபர்நகர் மீனாட்சி சௌக்கில் உணவகம் வைத்திருக்கும் முகமது அனீஸ் கூறுகையில் "எங்கள் கடைகளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. முதல்வர் சொன்னது போல் அவர்கள் ஏலம் விடுவார்களா? எந்தவொரு வன்முறை சம்பவத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை, எங்களை ஏன் குறிவைத்தார்கள் என்று தெரியவில்லை. . எங்களுக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இது எங்கள் வாழ்வாதாரத்தில் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று வேதனை தெரிவித்தார்.

இதற்கு தான் சீல்

இதற்கு தான் சீல்

,இதனிடையே சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக முதல்வரின் கூற்றுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்றாக விளக்கம் அளித்துள்ளது. இந்த கடைகள் ஏலம் விடப்படும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. அது உண்மை இல்லை.. மீனாட்சி சௌக்கில் வன்முறை நடந்ததால், நாங்கள் முழு பகுதியையும் குற்றம் நடந்த இடமாக கருதுகிறோம். இந்த கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன, அதற்கான ஆதாரங்களை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் 67 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம் " என்று விளக்கம் அளித்துள்ளது.

English summary
Muzaffarnagar’s Muslim Families said that Cops Barged Into Our Homes at Night, Smashed Everything, Snatched Cash and Jewellery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X