லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாரணாசியில் டிவிஸ்ட்.. மோடிக்கு எதிராக வேட்பாளரை மாற்றிய சமாஜ்வாதி.. சர்ப்ரைஸ் ஷாக்!

லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் சமாஜ் வாதி கட்சி சர்ப்ரைஸ் வேட்பாளர் ஒருவரை அறிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் சமாஜ் வாதி கட்சி சர்ப்ரைஸ் வேட்பாளர் ஒருவரை அறிவித்து இருக்கிறது.

இந்த லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார். இதற்காக கடந்த வாரம் பிரம்மாண்டமாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் ராய் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் அங்கு சமாஜ் வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் திடீர் என்று மாற்றப்பட்டுள்ளார்.

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

தேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர், அங்கு வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்தார். இந்திய ராணுவ வீரர்களுக்கு மிக மோசமான உணவு அளிக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டார்.

என்ன வீடியோ

என்ன வீடியோ

இவர் வெளியிட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலானது. இந்திய ராணுவம் குறித்து வார்த்தைக்கு வார்த்தை பேசும் மோடியின் ஆட்சியில் இந்த நிலையா என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து தேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த நிலையில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த இவர், லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்தார். மோடிக்கு எதிராக வாரணாசியில் இவர் சுயேட்சையாக நிற்க போவதாக அறிவித்தார்.

டிவிஸ்ட்

டிவிஸ்ட்

ஆனால் தற்போது புதிய திருப்பமாக இவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி சார்பாக சமாஜ் வாதி சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். இங்கு ஏற்கனவே சமாஜ்வாதி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த ஷாலினி யாதவ் தன்னுடைய வேட்புமனுவை வாபஸ் வாங்க உள்ளார்.

English summary
New Twist in Varanasi, SP Changes its Candidate, Fields Sacked Jawan Tej Bahadur Yadav against Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X