லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி.யில் 3000 டன் தங்கப் படிமங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஜிஎஸ்ஐ ஆய்வு நிறுவனம் மறுப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 3000 டன் தங்கப் படிமங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பர்தாவில் 2,943 டன் தங்கமும், ஹார்டி என்ற பகுதியில் 646 டன் தங்கமும் இருப்பதாக செய்திகள் வெளியாகின. தங்கம் மட்டுமல்லாமல் மற்ற சில கனிமங்களும் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் இந்தியாவில் தங்கத்தின் கையிருப்பு தற்போதைய நிலையை விட 5 மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்பட்டது.

ஏலம் விடும்

ஏலம் விடும்

இதுகுறித்து சோன்பத்ரா மாவட்ட சுரங்கத்துறை அதிகாரி ராய் கூறுகையில் சோன்பத்ராவில் தங்க படிமங்களை கண்டறியும் பணிகள் கடந்த 1992-1993-இல் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டது. ஹார்தி மற்றும் சோன்பத்ரா பகுதிகளில் தங்கச் சுரங்கம் இருப்பது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ டென்டர் மூலம் சுரங்கங்களை ஏலம் விடும் பணி விரைவில் தொடங்கும் என கூறியிருந்தார்.

தங்கத்தை தேடி

தங்கத்தை தேடி

ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த போதே இந்த சோன்பத்ரா பகுதியில் தங்கம் இருந்திருக்கலாம் என யூகித்துள்ளார்கள். இதை உண்மையாக்க அவர்கள் சோன்பத்ராவில் தங்கத்தை தேடியதாகவும் கூறப்படுகிறது. பிடிஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மாவட்ட சுரங்க அதிகாரிகள் சொன்னது போல உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் 3000 டன் அளவுக்கெல்லாம் தங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. உ.பி. மாநிலத்தில் கடந்த 1998-99 மற்றும் 1999- 2000 ஆண்டுகளில் தங்க படிமங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டோம்.

இந்திய புவியியல் ஆய்வு

அப்படி அங்கு தங்கப் படிமங்கள் இருப்பதாக தெரியவந்தால் அதுகுறித்து மாநில அரசுகளிடம் தெரிவிப்போம். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து அந்த மாநில சுரங்கத் துறைக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு தங்கம் இருப்பதாக சாதகமான சூழலி நிலவவில்லை என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
GSI says that No Gold deposits found in Sonbhadra, UP which as claimed by district mining official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X