லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் ரேஸிலிருந்து விலகல்.. லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. மாயாவதி பகீர் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

லக்னோ: மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது.

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது.

 வங்கிக் கடன் மோசடி.. இங்கிலாந்தில் தலைமறைவு.. மாறுவேடத்தில் லண்டனில் சுற்றிய நீரவ் மோடி கைது வங்கிக் கடன் மோசடி.. இங்கிலாந்தில் தலைமறைவு.. மாறுவேடத்தில் லண்டனில் சுற்றிய நீரவ் மோடி கைது

தொங்கு நாடாளுமன்றம்

தொங்கு நாடாளுமன்றம்

இந்த லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் சமயத்தில் மாநில கட்சிகள்தான் பிரதமரை முடிவு செய்யும் சக்தியை பெறும். அந்த வகையில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் சமயத்தில் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பதை பொறுத்துதான் ஆட்சி அமையும்.

மாயாவதி பிரதமர்

மாயாவதி பிரதமர்

இந்த நிலையில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பிரதமர் போட்டியில் இருக்கிறார் என்று செய்திகள் வந்தது. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில் மாயாவதியோ, மமதா பானர்ஜியோ, அகிலேஷ் யாதவோ பிரதமராக வாய்ப்பு உள்ளது. மாயாவதி இந்த பிரதமர் ரேஸில் இருந்தார்.

மாயாவதி இல்லை

மாயாவதி இல்லை

இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என்று மாயாவதி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் விருப்பம் இல்லை. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதியின் கூட்டணி வெற்றிதான் முக்கியம். என்னுடைய தனிப்பட்ட வெற்றி முக்கியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

காரணம்

காரணம்

மாயாவதி ராஜ் பாப்பார் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் போட்டியில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர் பிரதமர் ரேஸில் இருந்து விலகி உள்ளார். ஒருவேளை உத்தர பிரதேச முதல்வர் ஆவதுதான் அவரின் விருப்பமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Not in PM race anymore: I won't' contest in 2019 Lok Sabha Elections says BS leader Mayawati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X