• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சேலையை அப்படியே உருவி.. கதறி அழுத பெண்.. உபியில் அக்கிரமம்.. வீடியோவை மோடிக்கே டேக் செய்த பிரியங்கா

Google Oneindia Tamil News

லக்னோ: ஒரு வேட்பாளரின் அதுவும் ஒரு பெண் தொண்டரின் சேலையை உருவி பொதுவெளியில் அசிங்கப்படுத்தி உள்ளனர்.. மானப்பங்கப்படுத்தியும் உள்ளனர்.. இப்படி ஒரு கேவலம், யோகியின் உபியில் அரங்கேறி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க போகிறது.. இதனால் மாநிலமே பிஸியாக சுழன்று வருகிறது.. இதற்கான மனு தாக்கல்கள் நேற்று முடிவடைந்துள்ளன.

அதன்படி, 825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களுக்கு வேட்புமனுக்களும் பெற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளது.

பஸ்ஸில் வேகமாக ஏறிய சுடிதார் போட்ட பெண்.. திடீரென வந்த 'கலெக்டர் காயத்ரி'யால் அதிர்ந்த மன்னார்குடிபஸ்ஸில் வேகமாக ஏறிய சுடிதார் போட்ட பெண்.. திடீரென வந்த 'கலெக்டர் காயத்ரி'யால் அதிர்ந்த மன்னார்குடி

 வன்முறை

வன்முறை

அதில் லக்னோவிலிருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி என்ற பகுதியிலும் மோதல் வெடித்தது. இப்படிப்பட்ட கலவர சூழலில்தான் ஒரு கொடுமை சம்பவம் நடந்துள்ளது... சமாஜ்வாதி கட்சியின் ஒரு பெண் தொண்டரின் சேலையை பிடித்து அந்த கூட்டத்தில் இழுத்துள்ளார்கள்.. அந்த பெண்ணை பொதுவெளியிலேயே மானப்பங்கப்படுத்தியும் உள்ளனர்..

 பரபரப்பு

பரபரப்பு

இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி, பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த பெண், நடக்க போகும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட உள்ளார்.. அதற்காகத்தான் வேட்மனுவும் தாக்கல் செய்ய வந்தார். அப்போதுதான், வேறு கட்சியை சேர்ந்த, அதுவும் ஒரு வேட்பாளரே இந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுத்துள்ளார்.. அந்த வேட்பாளரின் ஆதரவாளர்களும் சேர்ந்து, இந்த பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளனர்..

காத்திருப்பு

காத்திருப்பு

அவர்களுக்கு இந்த பெண், தேர்தலில் போட்டியிடுவது பிடிக்கவில்லை.. அவர் வேட்பு தாக்கல் செய்ய கூடாது என்பதற்காகவே, அங்கு முன்கூட்டியே தயாராக காத்திருந்தனர்.. அதனால், கரெக்ட்டாக வேட்பு மனு தாக்கல் செய்த நேரத்தில், அவரை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் சேலையை உருவியும் மானபங்கப்படுத்தி உள்ளனர்... அந்த பெண் தன் மானத்தை காக்க, கதறி அழுகிறார்.. இந்த வீடியோ வெளியாகி அரசியல் கட்சி தலைவர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

 அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட் போட்டு கடுமையாக இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.. "இப்படி அந்த பெண்ணை தாக்கியவர்கள் பாஜக தொண்டர்கள், குறிப்பாக முதல்வர் யோகியின் பதவி ஆசை கொண்ட குண்டர்கள்" என்று சொல்லி நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார். ஆனால், காங்கிரசின் பிரியங்கா காந்தி, ஸ்ட்ரைட்டாக பிரதமர் மோடிக்கும், யோகிக்கும் இந்த வீடியோவை ட்வீட் செய்து விட்டார்..

 பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

அதுமட்டுமல்ல, "பிரதமர் மற்றும் முதல்வரின் வெடிகுண்டுகள், கற்கள், துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்திய உபியில் உள்ள உங்கள் தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.. அவர்கள் வேட்பு மனுக்களை பறித்து செய்தியாளர்களை தாக்கி, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள்... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஜனநாயகம் சீர்குலைந்து வருகிறது" என்று பிரியங்கா ட்வீட் செய்துள்ளார்.

 மோடி

மோடி

நடந்த இந்த சம்பவம் குறித்து உபி போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "வேட்புமனு தாக்கல் செய்ய போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுதான் இருந்தன... ஆனால் 14 பகுதிகளில் இருந்து வன்முறை கேஸ்கள் பதிவாகியுள்ளன... சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்... ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகளில் யோகி சிக்கி கொண்டுள்ளார்.. இதுவரை எதிர்க்கட்சிகள் கேட்ட எந்த கேள்விக்கும் முறையான பதில்களை அவர் தந்ததில்லை.

 கண்டனம்

கண்டனம்

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உபியில் எந்தவித பாதுகாப்பும் இல்லை என்ற பேச்சு இந்த 4 வருடமாகவே அதிகமாக ஒலித்து கொண்டிருக்கிறது.. அப்படி இருந்தும், ஒரு பெண் வேட்பாளரையே இன்று பொதுவெளியில் புடவையை பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியது, யோகிக்கு மேலும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது..!

English summary
On Camera Samajwadi Workers Sari Yanked in Uttar Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X