லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு!

கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு அயோத்தியில் இன்று சரயு நதியில் 5 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீராடும் 5 லட்சம் பேர்.. பலத்த பாதுகாப்பு!

    லக்னோ: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு அயோத்தியில் இன்று சரயு நதியில் 5 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் நடக்க உள்ளது. எல்லா வருடமும் தீபாவளிக்கு பிறகு இந்த கார்த்திகை பூர்ணிமா விழா அயோத்தியில் சரயு நதியில் நடக்கும். சரயு நதியில் இறங்கி மக்கள் புனித நீராடுவார்கள்.

    இதன் மூலம் மக்களின் பாவங்கள் கழுவப்பட்டு, எல்லோரும் நன்மை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் எப்போதும் பல்லாயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

    ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை! ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை!

    இந்த ஆண்டு

    இந்த ஆண்டு

    இந்த நிலையில் அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் இன்று நடக்கிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகிறது. நேற்றே சரயு நதியில் இறங்கி மக்கள் நீராட தொடங்கிவிட்டனர்.

    அதிகம்

    அதிகம்

    சரயு நதியில் நீராடுவதற்காக மக்கள் தற்போது அங்கு அதிக எண்ணிக்கையில் படையெடுத்து வருகிறார்கள். இன்று சுமார் 4-5 லட்சம் பேர் அங்கு வழிபாடு நடத்தலாம். மொத்தமாக இரண்டு நாட்களில் 7 லட்சம் பேர் அங்கு வழிபாடு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்பிற்கு தனி மாற்று இடம் கொடுக்கலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    போலீசார்

    போலீசார்

    இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு பின் அயோத்தியில் இந்த விழா நடக்க உள்ளது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் வரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எல்லாம் தயார் நிலை

    தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவப்படை எல்லாம் அங்கு தயார் நிலையில் இருக்கிறது. 18 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு மருத்துவர்களும் பணி செய்து வருகிறார்கள். இதனால் அந்த விழா மீதான எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

    English summary
    Over 5 lakh people are expected to take a dip in Ayodhya on Kartik Poornima today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X