லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் இருந்து போய்.. நேபாளம் வழியாக வரும் பெட்ரோல்.. 22 ரூபாய் விலை குறைவு.. உபியில் ஷாக்

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியாவில் இருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் திடீரென வழக்கத்திற்கு மாறாக பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் டீசல் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது. நேபாளத்தில் இருந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 வரை குறைவு என்பதால் அதை வாங்க அந்த மாநில மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் 92.59-க்கும், டீசல் விலை லிட்டர் 85.98க்கும் விற்பனையாகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பெட்ரோலின் விலை சதம் அடித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 90க்கும் அதிகமான விற்பனையாகி வருகிறது. சில மாநிலங்களில் 100ஐ நெருங்கி வருகிறது.

பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு... இந்த 'இரு' விஷயங்கள் தான் காரணம்... மத்திய அமைச்சரின் புது விளக்கம்பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு... இந்த 'இரு' விஷயங்கள் தான் காரணம்... மத்திய அமைச்சரின் புது விளக்கம்

வரி குறைவு

வரி குறைவு

இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இந்தியாவைவிட பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் இருந்துதான் பெட்ரோல் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. ஆனால் அங்கு இந்தியாவை ஒப்பிடும் போது அதன் பண மதிப்பு குறைவு மற்றும் வரி குறைவு என்பதால் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது.

22 ரூபாய் குறைவு

22 ரூபாய் குறைவு

நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளதால் நேபாளத்தின் எல்லையில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பெட்ரோல் டீசல் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. உள்ளூர் பெட்ரோல் பங்க்குகளைக் காட்டிலும் லிட்டருக்கு ரூ.22 குறைந்த விலையில் பெட்ரோல் கிடைத்த காரணத்தால் மக்கள் வாங்கி குவித்தனர்.

பம்ப் உரிமையாளர்கள் ஷாக்

பம்ப் உரிமையாளர்கள் ஷாக்

இதனால் உத்தரப்பிரதேச மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்படும் பெட்ரோல், சாலை ஓரங்களில் டேங்கர் மூலம் விற்கப்படுவதால், பெட்ரோல் பங்க்குகளின் விற்பனையில் நாளொன்றுக்கு 1,200 முதல் 1,800 லிட்டர் வரை குறைந்துள்ளது,'' என தெரிவித்தனர்.

பெட்ரோல் விலை என்ன

பெட்ரோல் விலை என்ன

நேபாளத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் நேபாள நாட்டின் மதிப்பின் படி 111.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் இந்திய மதிப்பில் 69.50 ஆகும். டீசல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 58க்கு விற்பனையாகிறது. நேபாளத்தை போல பிற அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தானிலும் கூட பெட்ரோல், டீசல் குறைந்த விலையிலேயே விற்பனையாகிறது. கடந்த 2018லும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 85ஐ தாண்டிய போது, நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65, டீசல் 55க்கு விற்பனையானது அப்போதும் கடத்தல் அதிகமாக இருந்தது.

English summary
The smuggling of petrol and diesel is taking place in areas adjoining the Nepal border with people going to Nepal on bikes and bicycles, and coming back with gallon cans filled with fuel to villages in West Champaran district. According to an official, the price of petrol in Nepal is Rs 111.20 (Nepalese Rs) which is equal to Rs 69.50 in Indian currency. Similarly, the price of diesel in Nepal is Rs 94.20 (Nepalese Rs) equivalent to Rs 58.88 in Indian currency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X