லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

144 தடையை மீறிய ஆதரவாளர்கள் கைதை கண்டித்து பிரதமர் மோடியின் சகோதரர் தர்னா போராட்டம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ விமான நிலையத்தில் 144 தடையை மீறிய தனது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்ததை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத மோடி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லக்னோவிற்கு இன்டிகோ விமானத்தில் இன்று மாலை 4 மணிக்கு பிரகலாத மோடி வந்தார். அப்போது அவரை வரவேற்க 100 ஆதரவாளர்கள் வந்திருந்தனர். உயர் பாதுகாப்பு இடமான விமான நிலையத்தில் இத்தனை பேர் கூடுவதற்கு 144 தடை இருக்கும் போது 100 பேர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

PM Modis brother sits on dharna at Lucknow airport

இதையடுத்து பிரகலாத் மோடியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதை அறிந்த பிரகலாத் மோடி விமான நிலையத்திலேயே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனது ஆதரவாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு நான் மட்டும் சுதந்திரமாக வெளியே இருப்பது அநியாயமானது.

இது என்ன புது வேஷம்.. எதற்காக இந்த முண்டாசு.. விளக்குகிறார் விஜயதாரணிஇது என்ன புது வேஷம்.. எதற்காக இந்த முண்டாசு.. விளக்குகிறார் விஜயதாரணி

இதனால் இந்த விமான நிலையத்திலேயே உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளேன். போலீஸாரிடம் கேட்ட போது அவர்களை கைது செய்யுமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாக கூறினார்கள். அதற்கான நகலையும் அவர்கள் காண்பிக்கவில்லை என்றார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த 100 பேரும் விடுவிக்கப்பட்டனர். மோடியின் சகோதரர் தர்னா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
PM Modi's brother Prahlad Modi sit on dharna at airport as his supporters were arrested for violating 144.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X