• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஜாக்கிரதை.. "சிவப்பு தொப்பிகள்" என்றால் ரெட் அலர்ட் என்று அர்த்தம்.. அகிலேஷ் மீது பிரதமர் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

லக்னோ: பயங்கரவாதிகளுக்கு கருணை காட்ட "சிவப்பு தொப்பிகள்" ஆட்சியமைக்க விரும்புகின்றது என்று சமாஜ்வாதி கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.. உத்தரபிரதேசத்தில் சிவப்பு தொப்பிகள் என்றால், சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) என்று அர்த்தம், அவர்கள் எப்போதுமே எச்சரிகை மணிகள்தான்" என்றும் பிரதமர் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் பேரவை தேர்தல் நடக்க உள்ளது.. இப்போதுள்ள ஆட்சியையே தக்க வைத்து கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

போட்டோஷூட்.. மாடல் அழகியை லாட்ஜில் அடைத்து.. 3 நாளும் சீரழித்த கும்பல்.. வீடியோ எடுத்து.. பெண் கைது போட்டோஷூட்.. மாடல் அழகியை லாட்ஜில் அடைத்து.. 3 நாளும் சீரழித்த கும்பல்.. வீடியோ எடுத்து.. பெண் கைது

மற்றொருபுறம், முன்னாள் முதல்வர்கள் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி உட்பட, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா போன்றோர் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரங்களை தொடங்கி உள்ளனர்.

சவால்

சவால்

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட போகிறது.. அகிலேஷ் யாதவ் தலைமையில் கூட்டணி அமையும் என தெரிகிறது.. அதேபோல மாயாவதியுடன் சில கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.. இந்த கட்சிகளில் பாஜகவுக்கு சவால்விடும் வகையில் காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் முன்னணியில் இருந்து வருகின்றன. பிரியங்கா காந்தி ஒருவருடமாகவே உபியில் முகாமிட்டு, தன்னுடைய வியூகங்களை செயல்படுத்த துவங்கி விட்டார்.

பாஜக

பாஜக

அதேபோல, செல்லுமிடமெல்லாம் பாஜகவின் குறைகளை, அதிருப்திகளை சுட்டிக்காட்டி, காரசாரமாக விமர்சித்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, இந்த முறை தேர்தலில் அதிரடி முடிவு ஒன்றை செயல்படுத்த போகிறாராம் அகிலேஷ்.. இத்தனை காலம் அதாவது இவரது அப்பா முலாயம் சிங் யாதவ் காலத்தில் இருந்தே யாதவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அகிலேஷ் தன்னுடைய தேர்தல் வியூகத்தை மாற்ற நினைக்கிறார்.. அதன்படி தலித்துகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார். இதுதான் பாஜகவுக்கு மேலும் கிலியை தந்து வருகிறது...

 உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்

காரணம், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலமாக உபி திகழ்ந்து வரும் நிலையில், 403 தொகுதிகளை கொண்ட இம்மாநில தேர்தலின் வெற்றிதான், தேசிய அரசியலின் வெற்றியாக மதிப்பிடப்பட்டு வருகிறது.. இதற்காகவே பாஜக பல்வேறு நலத்திட்டபணிகளை அறிவித்தும் வருகிறது. இன்று, கோரக்பூர் மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்... 8,603 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உரத்தொழிற்சாலை, 1,011 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்..

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசும்போது தெரிவித்த கருத்துக்கள் இவைதான்: "எந்த வேலையையும் நேர்மையான நோக்கத்துடன் செய்யும்போது, பேரிடர்கள் கூட ஒரு தடையாக மாறாது... இதே கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது நீண்டகால கோரிக்கை.. ஆனால், 2017-க்கு முந்தைய அரசுகள் என்ன செய்தன? எய்ம்ஸ் அமைக்க நிலம் ஒதுக்குவதில் ஏன் காலதாமதம் செய்தன. சிவப்பு தொப்பிகள் (சமாஜ்வாதி கட்சியினர்) அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்கள்.. அவர்களின் இந்த எண்ணம் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் தெரியும்...

 மக்களின் வலி

மக்களின் வலி

மக்களின் வலி, அவர்களின் பிரச்சனை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.. அந்த பிரச்சனைகள் அவர்களை எதுவும் செய்யாது.. ஊழல், நில அபகரிப்பு, மாஃபியா கும்பலுக்கு சுதந்திரம் தருவதற்கு சிவப்பு தொப்பிகளுக்கு அதிகாரம் வேண்டும். .. அவ்வளவுதான்.. பயங்கரவாதிகள் மீது இரக்கம் காட்டவும், அவர்களை ஜெயிலில் இருந்து விடுவிக்கவும்தான் இந்த "சிவப்பு தொப்பிகள்" ஆட்சி அமைக்க ஆசைப்படுகின்றன.. அதனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், உத்தரபிரதேசத்தில் சிவப்பு தொப்பிகள் என்றால், சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) என்று அர்த்தம்... அவர்கள் எப்போதுமே எச்சரிகை மணிகள்தான்" என்றார்.

சர்ச்சை

சர்ச்சை

இப்படித்தான் 2 நாளைக்கு முன்பும் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சமாஜ்வாடி கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.. "2017-க்கு முன்பு உபி எப்படி இருந்தது? வியாபாரிகள், நிம்மதியாக இருந்தார்களா? லுங்கி அணிந்திருந்த நபர்களால் வியாபாரிகள் மிரட்டப்பட்டனர்.. முகமூடி கட்டிக் கொண்டு, லுங்கி, தலையில் தொப்பி அணிந்து, கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தனர் அந்த குண்டர்கள்.. அந்த அளவுக்கு சமாஜ்வாதி கட்சியின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது.. ஆனால் 2017-க்கு பிறகு, லுங்கி சாப் எனப்படும் அந்த குண்டர்கள் இப்போது இல்லை என்றால் அதற்கு காரணம், இந்த பாஜக ஆட்சிதான்" என்று பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi says, The Red caps want to bring terrorists out of jail
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X