லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு ஒரே சாதி.. அதற்கு நான் எதிரானவன்.. அதை ஒழிக்க நினைக்கிறேன்.. மோடி பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

லக்னோ: எனக்கு ஒரே சாதிதான். அது வறுமை சாதி. அதற்கு நான் எதிரானவன். அதை ஒழிக்க நினைக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-ஆம் இறுதி கட்ட தேர்தல் வரும் 19-ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறுகிற உத்தரப்பிரதேசத்தில் பலியாவில் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் கூறுகையில் நாட்டை சுரண்டிவிட்டு நான் பிரதமர் ஆகவேண்டும் என ஒரு போதும் எண்ணியது இல்லை.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

நான் இளமை பருவத்தில் ஏழையாக இருந்தபோது அனுபவிக்காத அனைத்து வசதிகளையும் ஏழை மக்களுக்கு வழங்க விரும்புகிறேன். எனக்கு பினாமி சொத்து உள்ளது என்றோ, பண்ணை வீடு உள்ளது என்றோ, வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளேன் என்றோ வணிக வளாக உள்ளது என எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியுமா.

வறுமைக்கு

வறுமைக்கு

ஆனால் இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளிடம் உள்ளன. அவர்கள்தான் பங்களாக்களை கட்டி வருகின்றனர். என்னிடம் உள்ள ஒரே சாதி வறுமைதான். எனவேதான் நான் வறுமைக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வருகிறேன்.

வார்த்தை

வார்த்தை

சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கரம் கோர்த்துள்ளதே அவர்கள் செய்த ஊழலை மறைப்பதற்காக, ஊழலில் தொடர்புடைய உறவினர்களை காப்பாற்றவும்தான். மோடியை வார்த்தைகளால் தாக்காமல் அவர்களால் ஒரு பொழுதையும் கழித்ததில்லை.

தேசிய பாதுகாப்பு

தேசிய பாதுகாப்பு

மே 23-ஆம் தேதிக்கு பிறகு அவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசிக் கொள்வர். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பதிலடி கொடுத்துள்ளோம். ஆனால் தேசிய பாதுகாப்பு குறித்து அந்த இரு கட்சிகளும் பேசி வருகின்றன என்றார் மோடி.

English summary
PM Narendra Modi says that Narendra Modi wants to eradicate poverty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X