லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டணி கட்சி தலைவர்கள் படை சூழ...பிரதமர் மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: மோடி வேட்பு மனு தாக்கல் பேரணி...கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு- வீடியோ

    லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆம் ஆண்டு, முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலைவிட 3.7லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    தற்போது 2019 மக்களவை தேர்தலிலும் மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.

    தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை!!தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை!!

    பிரம்மாண்ட பேரணி

    பிரம்மாண்ட பேரணி

    ஆரத்தி நிகழ்ச்சிவேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வாரணாசி வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று அந்த நகரத்தையே உலுக்கும் வகையில், மிகப்பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனத்தில் பாஜக தலைவர்களுடன் சென்றார். அதன்பின்னர் கங்கை நதிக்கரையில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.

    புல்வாமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதல்

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வாரணாசியில் நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூற முடியாது. ஆனால் அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளேன். இங்கு ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. .புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை கொன்றதற்கு பதிலடியாக 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.

     வேட்புமனு

    வேட்புமனு

    வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகலிதளம் தலைவர் பிகாஷ்சிங் பாதல், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    காங் வேட்பாளர்

    காங் வேட்பாளர்

    பிரதமர் நரேந்திர மோடியை எதிர்தது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.. அவருக்கு பதில் சென்ற முறை மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராயையே மீண்டும் காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கி உள்ளது.

    English summary
    Lok Sabha Elections 2019: PM Modi to file nomination from varanasi in today, yesterday Holds big Roadshow in Varanasi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X